ஐரோப்பா

லண்டனில் உள்ள ஒரு தொழில்துறை எஸ்டேட்டில் தீவிபத்து – ஏராளமான வாகனங்கள் நாசம்!

  • July 12, 2025
  • 0 Comments

லண்டனில் உள்ள ஒரு தொழில்துறை எஸ்டேட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து இரவு முழுவதும் 150க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் 25 தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தென்கிழக்கு லண்டனில் உள்ள மேபோல் கிரசென்ட்டில் உள்ள ஒரு தொழில்துறை எஸ்டேட்டில் நேற்று இரவு 10.47 மணியளவில்  தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். அவசர சேவைகளின்படி, தற்போது ஒரு கிடங்கு தீப்பிடித்து எரிந்து வருவதாகவும், ஏராளமான வாகனங்கள் தீயில் எரிக்கப்பட்டுள்ளன. புகை […]

ஐரோப்பா

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல் எதிரொலி : போர் விமானங்களை ஏவிய நேட்டோ நாடு!

  • July 12, 2025
  • 0 Comments

ரஷ்யா மேற்கு உக்ரைன் மீது தனது மிகத் தீவிரமான தாக்குதல்களை மேற்கொண்டதால் நேட்டோ இன்று போர் விமானங்களை ஏவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ருமேனிய எல்லைக்கு அருகிலுள்ள செர்னிவ்ட்சியில் ஒரே இரவில் 20 முதல் 30 ஏவுகணைகள் மற்றும் 700 ட்ரோன்கள் ஏவப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர். தாக்குதலுக்குப் பிறகு நகரத்தில் அடர்ந்த புகை பரவியது. காமிகேஸ் ட்ரோன் தாக்குதல்களுக்காக ஏற்கனவே […]

இலங்கை

இலங்கையின் கடற்பகுதிகள் கொந்தளிப்பாக இருக்கும் – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

  • July 12, 2025
  • 0 Comments

இலங்கையின் கடற்பகுதிகளில் காற்றின் சீற்றம் அதிகமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் கடல் அலைகளில் விளையாடுவதை  தவிர்க்குமாறு வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் அலைகள் கொந்தளிப்பானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கலாம். கடற்பரப்புகளில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கடல் அலைகள் கொந்தளிப்பானதாகவும் இருக்கும் […]

இந்தியா

ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு துண்டிக்கப்பட்ட எரிபொருள் சுவிட்சுகள் ;அறிக்கை

  • July 12, 2025
  • 0 Comments

கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 260 பேர் கொல்லப்பட்டனர். அவ்விமானம் நிலத்திலிருந்து புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு எரிபொருளை எஞ்சின் இயந்திரத்துக்குள் செலுத்தும் செயல்பாடுகளை இயக்கும் முறை தொடர்பில் குழப்பம் ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் எஞ்சின் இயந்திரங்களுக்கு எரிபொருள் சரியாகப் போகவில்லை. அதன் காரணமாக விமானிகள் இருக்கும் விமானப் பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. அகமதாபாத்திலிருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குப் போகவிருந்த அந்த போயிங் […]

இலங்கை

கொழும்பில் உள்ள பௌத்த விரையில் ஹன்சிகா மோத்வானி வழிபாடு

  • July 12, 2025
  • 0 Comments

தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி, கொழும்பில் உள்ள பிரசித்தி பெற்ற கங்காராமய பௌத்த விகாரைக்கு சென்று வழிபாடில் ஈடுபட்டார். விகாரத்தில் பூஜைகளில் பங்கேற்ற ஹன்சிகா, பௌத்த பிக்குகளிடம் ஆசியும் பெற்றார். அவருடன் அவரது தாயாரும் இருந்தார். பின்னர், அங்குள்ள நூலகம், அருங்காட்சியகம், கல்வி நிலையம் மற்றும் யாசகசாலை ஆகியவற்றை பார்வையிட்டு, அதன் அமைப்புகளையும் பண்பாட்டு மரபுகளையும் ரசித்தார். நடிகையின் இந்த விஜயம், சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பைப் […]

கருத்து & பகுப்பாய்வு

சூரியனுக்கு மிக அருகில் பறந்த விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியானது

  • July 12, 2025
  • 0 Comments

நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe) விண்கலம் சூரியனை மிக அருகில் படம் பிடித்து, இதுவரை எடுக்கப்பட்ட மிக விரிவான மற்றும் கூர்மையான படங்களை வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பரில், இந்த விண்கலம் சூரியனிலிருந்து மட்டும் 6.2 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சென்றது. இதுவரை எந்தவொரு மனிதன் உருவாக்கிய விண்கலமும் இவ்வளவு அருகில் சூரியனை அணுகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தின் போது, பார்க்கர் சோலார் ப்ரோப் எடுத்து அனுப்பிய படங்களில் மூன்று கொரோனல் மாஸ் […]

விளையாட்டு

வரலாற்றில் முதல் முறையாக டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற இத்தாலி

  • July 12, 2025
  • 0 Comments

இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் 2026 ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கு இத்தாலி நேற்று தகுதி பெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் இத்தாலி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். 2007 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, 24 நாடுகள் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் குறைந்தது ஒரு பதிப்பிலாவது பங்கேற்றுள்ளன. பட்டியலில் சேரும் 25வது நாடாக இத்தாலி மாறியுள்ளது. இங்கிலாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்துக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் […]

வாழ்வியல்

Reverse Walking கொடுக்கும் நன்மைகள்

  • July 12, 2025
  • 0 Comments

உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கவும், உங்கள் முழங்கால்களை வலுப்படுத்தவும் ரிவர்ஸ் வாகிங்க், அதாவது பின்னோக்கி செய்யும் நடைபயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரிவர்ஸ் வாகிங்க் என்பது பின்னோக்கி அடியெடுத்து வைத்து நடப்பதற்கான ஒரு எளிய செயல்முறையாகும். பின்னோக்கிய நடைபயிற்சி பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது உடற்தகுதியைப் பராமரிக்க மிகவும் நன்மை பயக்கும். இது விசித்திரமாகத் தோன்றினாலும், இந்த லோ இம்பாக்ட் உடற்பயிற்சி தசைகளை வலுப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த வகையான ரிவர்ஸ் வாங்கிங்கால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

டெக்சாஸை உலுக்கிய வெள்ளம் – பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

  • July 12, 2025
  • 0 Comments

டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் நேற்று பார்வையிட்டனர். கடந்த ஜூலை 4ஆம் திகதி தொடர் கனமழையால் குவாடலுபே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி 36 குழந்தைகள் உட்பட 120 பேர் உயிரிழந்தனர். பலர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. வெள்ளம் ஏற்படுத்திய அழிவுகளையும், […]

ஆசியா

வாழும் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன் – சீனாவில் பரபரப்பு ஏற்படுத்திய நபர்

  • July 12, 2025
  • 0 Comments

சீனாவில் ஒருவர் உயிருடன் உள்ள தாய்க்கு நீண்ட ஆயுள் வேண்டி சவப்பெட்டி வாங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. 70 வயதைக் கடந்த தாய்க்காக அவர் நடத்திய இந்த சடங்கு, பாரம்பரிய நம்பிக்கைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்நிகழ்வில், அவருடைய தாய் ஒரு விசிறியைப் பிடித்தபடி குதூகலமாக சவப்பெட்டிக்குள் அமர்ந்திருக்கும் காட்சியைத் தரும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது. இந்த சடங்கிற்கு மொத்தம் 20,000 யுவான் ( செலவிடப்பட்டுள்ளது. சடங்கு ஏற்பாட்டின் ஒரு பகுதியாக, […]