ஏவப்பட்ட 14 வினாடிகளில் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்
ஆஸ்திரேலியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக கில்மர் நிறுவனம் செயல்படுகிறது. குயின்ஸ்லாந்து மாகாணம் யாடலா நகரை மையமாக கொண்டு செயல்படும் இந்த தனியார் நிறுவனம் அரசின் நிதியுதவிகளை பெற்று வருகிறது. இந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக ராக்கெட் ஒன்றை தயாரித்து விண்ணில் செலுத்த கில்மர் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி ‘எரிஸ்’ என்ற ராக்கெட்டை தயாரித்தது. குறித்த நேரத்தின்படி இது நேற்று விண்ணில் ஏவப்பட்டது. கில்மர் நிறுவனத்துக்கு சொந்தமான ஏவுதளத்தில் இருந்து அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. […]













