இலங்கை செம்மணி மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட பிற பொருட்களை அடையாளம் காண பொதுமக்களிடம் கோரிக்கை!
விசாரணைக்கு உதவும் வகையில், செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்கள் மற்றும் உடைகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் மனித எலும்புக்கூடு அகழ்வாய்வு வரலாற்றில், குற்றம் இடம்பெற்ற பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்ட வளாகத்தில் பொதுமக்களின் பங்களிப்புடன் இதுபோன்ற அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகிறது. சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் ஓகஸ்ட் 5, 2025 அன்று பிற்பகல் 1.30 முதல் மாலை 5 […]













