காசாவில் 20,000 அமைதி காக்கும் படையினரை நிலைநிறுத்த இந்தோனேசியா தயார்: ஐ.நா-வில் ஜனாதிபதி பிரபோவோ
அமைதிப் பணிக்காக குறைந்தது 20,000 வீரர்களை காஸாவிற்கு அனுப்பத் தயாராக இருப்பதாக இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் சபையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) உரையாற்றிய பிரபோவோ, உலகில் ஆக அதிக முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்தோனீசியா, ‘வலிமையால் சரியானதைச் செய்ய முடியாது’ என்பதைக் காட்டும் வகையிலான அமைதியை விரும்புவதாகக் கூறினார். “ஐநாமீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அமைதிக்குக் காப்பாளர்கள் தேவைப்படும் இடத்தில் சேவையாற்றுவதைத் தொடர்வோம்,” என்று அவர் சொன்னார். “ஐநா […]













