ஆந்திராவில் கொதிக்கும் பாலில் விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை
பாடசாலை சமையலறைக்குள் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் பால் பானையில் தற்செயலாக விழுந்த ஒன்றரை வயது சிறுமி தீக்காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். அனந்த்பூர் மாவட்டம் புக்கராயசமுத்திரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் குருகுல பாடசாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சேவா உச்ச நிறுவனத்தின் கீழ் உள்ள பாடசாலையில் பாதுகாவலராக பணிபுரியும் தனது தாயுடன் 17 மாத குழந்தை அக்ஷிதா சமையலறையில் இருந்துள்ளார் மாணவர்களுக்கு விநியோகிக்க தயாரிக்கப்பட்ட சூடான பால் குளிர்விக்க வைக்கப்பட்டிருந்தது. அப்போது அக்ஷிதாவும் அவரது தாயார் கிருஷ்ணவேணியும் சமையலறையை விட்டு […]













