இலங்கை

இலங்கையில் பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் சுகவீனம் அடைந்ததால் பரபரப்பு!

  • September 30, 2025
  • 0 Comments

இலங்கையில் பாடசாலைக்கு சென்ற 40 மாணவர்கள் இன்று (30.09) திடீரென சுகவீனம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மெதிரிகிரியவில் உள்ள மண்டலகிரிய தேசியப் பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியில் சிரமதாணப் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென சுகவீனம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு அரிப்பு தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பள்ளி அதிபர் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.    

ஆசியா செய்தி

ஆப்கானிஸ்தான் முழுவதும் முடங்கிய தொலைத்தொடர்பு சேவைகள்!

  • September 30, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் நாடு தழுவிய ரீதியில் தொலைத் தொடர்பு சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டில் அரசமைத்துள்ள தலிபான்கள் ஃபைபர்-ஆப்டிக் இணைய இணைப்புகளைத் துண்டிக்கத் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாடு தற்போது “முழுமையான இணைய முடக்கத்தை” சந்தித்து வருவதாக, இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தெரிவித்துள்ளது. சர்வதேச செய்தி நிறுவனங்கள் தலைநகர் காபூலில் உள்ள அலுவலகங்களுடனான தொடர்பை இழந்துவிட்டதாகக் கூறுகின்றன. ஆப்கானிஸ்தான் முழுவதும் மொபைல் இணையம் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. […]

ஐரோப்பா

வளர்ச்சி சவால்களுக்கு மத்தியில் புதுப்பிக்கப்பட்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக பிரிட்டிஷ் சான்சலர் சபதம்

  • September 30, 2025
  • 0 Comments

பிரிட்டிஷ் சான்சலர் ரேச்சல் ரீவ்ஸ், சிக்கன நடவடிக்கைகளை நிராகரித்து, பொது சேவைகளை ஆதரித்து, முதலீட்டை அதிகரித்து, பணவீக்கத்தைக் குறைத்து, புதுப்பிக்கப்பட்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக சபதம் செய்துள்ளார். திங்கட்கிழமை நடைபெற்ற தொழிற்கட்சியின் வருடாந்திர மாநாட்டில் உரையாற்றிய ரீவ்ஸ், தொடக்கப் பள்ளிகளில் நூலகங்களுக்கு நிதியளித்தல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வேலை அல்லது கல்வி இல்லாத தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குதல், வீட்டுவசதி நெருக்கடியைச் சமாளித்தல், நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட சில குறிப்பிட்ட […]

மத்திய கிழக்கு

அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய உள்ள ஹமாஸ்; வரவேற்பு தெரிவித்துள்ளன அரபு, முஸ்லிம் நாடுகள்

  • September 30, 2025
  • 0 Comments

காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க ஆதரவுடன் கூடிய ஒரு திட்டத்தை ஹமாஸ் பெற்றுள்ளது, இதை கத்தார் மற்றும் எகிப்திய மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்டது என்று ஹமாஸ் வட்டாரம் திங்களன்று தெரிவித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆதரவைப் பெற்ற இந்தத் திட்டம், தோஹாவில் நடந்த ஒரு சந்திப்பின் போது வழங்கப்பட்டது. கத்தார் பிரதமரும் எகிப்தின் பொது புலனாய்வு சேவைத் தலைவரும் இந்தத் திட்டத்தை ஹமாஸ் பேச்சுவார்த்தையாளர்களிடம் வழங்கியதாக […]

இலங்கை

இலங்கையில் 03 இலட்சத்தை நெருங்கும் ஒரு பவுண் தங்கத்தின் விலை!

  • September 30, 2025
  • 0 Comments

கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலைகளில் ஏற்படும் மாற்றத்தை பொருத்து ஏற்ற இறக்கத்துடன் பதிவாகிவருகிறது. இதற்கமைய இன்று (30) இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உலக சந்தையில் தங்கதின் விலை உயர்வடைந்த நிலையில் இந்த மாற்றம் வந்துள்ளது. இலங்கையில் தங்கத்தின் விலை விபரம் வருமாறு, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை – ரூ. 1,150,141 24 காரட் தங்கம் 1 […]

பொழுதுபோக்கு

ரித்திகா சிங்கை ஆச்சர்யப்படுத்திய ரஜினி

  • September 30, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரித்திகா சிங்.முதல் படத்திலேயே பட்டையை கிளப்பிய ரித்திகா, தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இதன்பின் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து வேட்டையன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்களை கவர்ந்தார். இந்த நிலையில், நடிகை ரித்திகா சிங் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எப்படிப்பட்ட ஒரு நபர் என்பது குறித்து வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதில் “திரையுலகில் உள்ள சில நடிகர்களுடன் நடித்த தருணங்கள் எனது மனதில் எப்போதும் இருக்கும். […]

பொழுதுபோக்கு

குழந்தை பிறக்க முன்பே சூர்யா செய்த அந்த செயல்

  • September 30, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகின்றனர் சூர்யா – ஜோதிகா. இவர்கள் காதலித்து கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் சூர்யா தொடர்ந்து படங்கள் நடித்து வந்த நிலையில், ஜோதிகா குடும்பத்தை கவனித்து கொண்டிருந்தார். இந்நிலையில், வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சூர்யாவுடன் பணியாற்றிய மெமரிஸை சமீரா ரெட்டி பேட்டி ஒன்றில் ஷேர் செய்துள்ளார். அதில், ” வாரணம் ஆயிரம் ஷூட்டிங்கிற்காக சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்தோம். அப்போது ஜோதிகா கர்ப்பமாக இருந்தார். சூர்யா தந்தை […]

பொழுதுபோக்கு

விஜய்க்காக எஸ்.ஏ.சந்திரசேகர் செய்யும் செயல்… என்ன தெரியுமா?

  • September 30, 2025
  • 0 Comments

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய். சமீபத்தில் நடைபெற்ற கரூர் பிரச்சனையில் சற்று அமைதியாக உள்ளார். இந்நிலையில், விஜய்க்கு அரசியலில் வெற்றி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாள்தோறும் அன்னதானம் செய்து வருகிறார் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த அன்னதானத்தால் பயன் பெற்று வருகிறார்கள். […]

இலங்கை

இலங்கை சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

  • September 30, 2025
  • 0 Comments

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இவ்வாறு வழங்கப்படுகின்றது. அதற்கமைய, இது இன்று முதல் ஒரு முன்னோடித் திட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, புதுப்பித்தல் செயல்பாட்டின் போது தற்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தில் எந்த மாற்றங்களும் தேவையில்லை என்றால், தற்காலிக அனுமதிப் பத்திரத்தை […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் டிரம்ப் விடுத்த காலக்கெடு நிறைவு – பதவி விகும் ஒரு இலட்சம் அரச ஊழியர்கள்

  • September 30, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் ஒரு லட்சம் அரச ஊழியர்கள் தானாக முன்வந்து பதவி விலகவுள்ளனர். தானாக முன்வந்து அரசு ஊழியர்கள் தங்கள் பதவி விலகலை இந்த மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். நிர்வாக செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதமாகத் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கமைய, அவர் கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று ஒரு இலட்சம் ஊழியர்கள் பதவி விலகவுள்ளனர். அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக கொள்கைகளினால், 3 இலட்சம் அரசு ஊழியர்கள், […]