பொழுதுபோக்கு

அரசனில் இணையும் சூப்பர் ஸ்டார்கள்

  • October 8, 2025
  • 0 Comments

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் அரசன் திரைப்படத்தில் பல நடிகர்கள் இணைந்துள்ளனர். இப்படத்தில் நடிகர் அமீரின் ராஜன் கதாபாத்திரம் இருக்கிறதாம். அதனால், அமீர் நடிக்கிறார். நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப்பிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கிச்சா சுதீப் ஒப்புக்கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்புகான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அரசன் படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். அனிருத்தின் பிறந்த நாளான 16ஆம் திகதி இப்படத்தின் ப்ரோமோ வெளியாகும் […]

ஆசியா

சிங்கப்பூரில் மற்றுமொரு தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

  • October 8, 2025
  • 0 Comments

மலேசிய நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பரந்தாமன் (38) என்ற நபருக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் 51.84 கிராம் ஹெராயின் போதைப்பொருளைச் சிங்கப்பூருக்குக் கடத்தியதாக  குற்றம் சாட்டப்பட்ட அவர்  வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் திகதி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தால் பன்னீர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

இந்தியாவிற்கான விசா விதிகளை தளர்த்தும் எண்ணம் இல்லை – பிரித்தானிய பிரதமர்!

  • October 8, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கான விசா விதிகளை இங்கிலாந்து தளர்த்தாது என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட குழுவினருடன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாமரிடம், அமெரிக்கா  H-1B  விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதனை பிரித்தானியா சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த அவர், இங்கிலாந்து பொருளாதாரத்தை வளர்க்க உதவும் வகையில் உலகம் முழுவதிலுமிருந்து “சிறந்த திறமையாளர்களை” ஈர்க்க இங்கிலாந்து விரும்புவதாக கூறியுள்ளார்.  இந்தியர்களுக்கான விசா விதிகளை தளர்த்தும் எண்ணம் இல்லை எனக் […]

இலங்கை செய்தி

முத்துநகர் காணிகளை மக்களிடம் கையளிக்க வேண்டும் – கலீலுர் ரஹ்மான்!

  • October 8, 2025
  • 0 Comments

மக்கள் தந்த ஆணைக்கு மதிப்பளித்து முத்து நகர் காணிகளை விவசாயிகளுக்கே அரசாங்கம் வழங்க முன்வர வேண்டும் என  ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் முத்து நகர் காணி மீட்பு போராட்டகாரர்களுக்கு ஆதரவளித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  1972ம் ஆண்டு காலப்பகுதியில் முத்து நகர் காணிகள் அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டது. வேறு பிரதேசங்களில் […]

இலங்கை

இலங்கையில் தனியார் பேருந்துகளில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் பேருந்துகளில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணங்களைச் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம்  30 ஆம் திகதி  முதல் இந்த திட்டம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கருத்து வெளியிட்ட  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதற்கான ஒரு அமைப்பை உருவாக்க தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். […]

பொழுதுபோக்கு

இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு

  • October 8, 2025
  • 0 Comments

கவின் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது படத்தின் பெயர் போஸ்டராக இருக்கலாம், நயன்தாரா அல்லது கவினின் கதாப்பாத்திரமாக இருக்கலாம், அல்லது வெளியீட்டுத் திகதியாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர்கள் கவின், நயன்தாரா இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்கா

மாலியில் எரிபொருளுக்குப் பாரிய தட்டுப்பாடு – பகல், இரவாக வரிசையில் நிற்கும் மக்கள்!

  • October 8, 2025
  • 0 Comments

மாலியில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினை நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் பலரும் இரவு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின்  (JNIM) இன் போராளிகள் மாலிக்கு வரும் எரிபொருள் தாங்கிய வண்டிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாரியளவு முடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.  பமாகோவில் (Bamako) உள்ள வங்கி ஊழியரான அமடோ பெர்த்தே என்ற நபர் […]

இலங்கை செய்தி

இலங்கையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது – உலக வங்கி!

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான பொதுத்துறை ஊழியர்கள் இருப்பதாகவும், ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு குறைந்த சம்பளம் மட்டுமே கிடைப்பதாகவும் உலக வங்கி கூறியுள்ளது. உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கியோவோக் சாக்சியன் தலைமையிலான  குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அரசாங்க நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷா டி சில்வா மற்றும் பிற குழு உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இந்தப் பிரச்சினைக் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொதுத்துறை ஊழியர்களின் எண்ணிக்கையை சரிசெய்து ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டிய […]

பொழுதுபோக்கு

உலகளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற “காந்தாரா” – படக்குழு வெளியிட்ட அறிக்கை

  • October 8, 2025
  • 0 Comments

காந்தாரா தெய்வ கதாபாத்திரங்களின் மகத்துவத்தை அவமதிக்காதீர்கள் என்று படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. காந்தாரா திரைப்படம் வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், காந்தாரா திரைப்படத்தின் முன்கதையை மையமாக வைத்து, ‘காந்தாரா சாப்டர் – 1’ திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டியே இப்பத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார். இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், காந்தாரா தெய்வ கதாபாத்திரங்களின் மகத்துவத்தை மிமிக்ரி, ஒப்பனை செய்து கெடுக்காதீர் என்று படக்குழு வேண்டுகோள் […]

இலங்கை

இலங்கையில் முட்டை விலையில் ஏற்பட்ட மாற்றம்

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு வெள்ளை முட்டை 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு முட்டை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக முட்டையின் விலை சிறிதளவு அதிகரித்திருந்த நிலையில் மீண்டும் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.