உலகம்

காசாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஹமாஸ் முயற்சி – கடும் கோபத்தில் ட்ரம்ப்

  • October 16, 2025
  • 0 Comments

காசாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஹமாஸ் முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தள்ளார். காசாவின் 45 சதவீத பகுதிகளில் இருந்து இஸ்ரேல் இராணுவம் பின்வாங்கியுள்ளது. இந்த நிலையில், அந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நடவடிக்கைக்களை ஹமாஸ் அமைப்பினர் முடுக்கிவிட்டுள்ளனர். போரின்போது இஸ்ரேல் ராணுவத்துக்கு உதவியதாக 8 பேரை, பொதுவெளியில், கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக்கொன்றனர். காசாவின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் ஆயுதக் குழுவினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் சண்டை நடந்துவருகிறது. […]

உலகம்

பிரான்ஸை நோக்கி படையெடுக்கும் இந்திய சுற்றுலாப் பயணிகள்

  • October 16, 2025
  • 0 Comments

பிரான்ஸிற்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 40 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவின் UPI தொழில்நுட்பம் தற்போது பிரான்ஸில் விரிவுபடுத்தப்பட்டு வருவதால் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான பரிவர்த்தனைகளை எளிதாக்கியுள்ளது. இதனால் பிரான்ஸ் செல்லும் இந்தியர்களும் அதிகரித்துள்ளதாக லைரா நெட்வொர்க்கின் (Lyra Network) தலைவர் கிறிஸ்டோப் மேரியட் (Christophe Marriott) தெரிவித்து்ளளார். ஒரு வருடத்திற்கு முன்பு நாம் ஈபிள் டவரில் UPI வசதியை அறிமுகப்படுத்தினோம். அதன் பிறகு, இந்திய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் 40 சதவீதம் […]

உலகம் செய்தி

சர்ச்சைக்குரிய சடலத்தை ஒப்படைத்த ஹமாஸ் – கடும் கோபத்தில் இஸ்ரேல்

  • October 16, 2025
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பினால் பணயக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்த போது உயிரிழந்தவர்களின் சடலங்களை இஸ்ரேலிடம் ஒப்படைப்பதில் மீண்டும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒப்படைப்பதில் ஹமாஸால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ் அமைப்பினால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட, நான்கு உடலங்களில் ஒன்று, தேடப்படும் பணயக்கைதிகளுடனும் பொருந்தவில்லை என்று இஸ்ரேல் கூறியுள்ளது. அமெரிக்காவின் காசா அமைதித் திட்ட முதல் கட்டத்திற்கு அமைய 48 பணயக்கைதிகளையும் இஸ்ரேலிடம் ஒப்படைக்க ஹமாஸ் இணக்கம் தெரிவித்திருந்தது. இதன்படி, உயிருடன் உள்ள 20 […]

உலகம் செய்தி

பூமிக்கு ஆபத்தாக மாறியுள்ள செயற்கைக்கோள்கள்

  • October 16, 2025
  • 0 Comments

எதிர்காலத்தில் பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விண்வெளியில் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்லிங்க் (Starlink) போன்று தற்போது தினமும் ஒன்று அல்லது இரண்டு செயற்கைக் கோள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகின்றன. விண்வெளியில் தற்போது 8,000க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் இருப்பதாக வானியற்பியல் நிபுணர் ஜோனதன் மெக்டோவெல் (Jonathan McDowell) தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), அமேசான் […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் மின்னணு பயண அங்கீகார (Electronic Travel Authorization) திட்டம்

  • October 15, 2025
  • 0 Comments

சுற்றுலா அல்லது வணிக ரீதியாக குறுகிய காலத்திற்கு இலங்கை வரும் அனைத்து வெளிநாட்டினரும், வருகைக்கு முன்னர் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization) பெறுவது அவசியம் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு துறை (Department of Immigration and Emigration) அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை 2025 அக்டோபர் 15ம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல இலங்கை தூதரகங்களால் சமீபத்திய நாட்களில் பகிரப்பட்ட இந்த அறிவிப்பு, தற்போது […]

ஐரோப்பா செய்தி

ஒடேசா (Odessa) நகர மேயரின் உக்ரைன் குடியுரிமையை ரத்து செய்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

  • October 15, 2025
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy), ரஷ்ய பாஸ்போர்ட் வைத்திருப்பதாகக் கூறி, ஒடேசா (Odessa) மேயர் ஜெனடி ட்ருகானோவின் (Gennadiy Trukhanov) உக்ரைனிய குடியுரிமையை ரத்து செய்துள்ளார். மேலும், மிகப்பெரிய துறைமுக நகரமான ஒடேசாவை நடத்துவதற்கு உக்ரைன் தலைவர் ஒரு இராணுவ நிர்வாகத்தை நிறுவி உளவுத்துறை ஜெனரல் செர்ஹி லைசாக்கை (Serhii Lysak) தலைவராக நியமித்துள்ளார். இந்த புதிய பொறுப்பை ஏற்க, செர்ஹி லைசாக், இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக வகித்து வந்த டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk) பிராந்தியத்தின் […]

உலகம் செய்தி

பிரித்தானியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சென்ற விமானம்

  • October 15, 2025
  • 0 Comments

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) சென்ற விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பிரித்தானியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. பெல்ஜியம் (Belgium) தலைநகர் பிரஸ்ஸல்ஸில் (Brussels) நடந்த நேட்டோ (NATO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இருந்து ஹெக்செத் அமெரிக்காவிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், “நிலையான நடைமுறைகளின்படி விமானம் தரையிறங்கியது, செயலாளர் ஹெக்செத் உட்பட விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் […]

செய்தி விளையாட்டு

பாகிஸ்தான், இங்கிலாந்து பெண்கள் உ – கோ போட்டி மழையால் ரத்து

  • October 15, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில், கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 16வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டதால் DLS (Duckworth–Lewis–Stern) முறையில் போட்டி 31 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 31 ஓவர்களுக்கு இங்கிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்து […]

உலகம் செய்தி

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியின் இந்திய பயணம் நிறைவு

  • October 15, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியின் (Amir Khan Muttaqi) ஆறு நாள் இந்தியப் பயணம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், அவர் காபூலுக்கு (Kabul) புறப்படுவதற்கு முன், ஷேக்-உல்-ஹிந்த் மௌலானா மஹ்மூத் ஹசனுக்கு (Sheikh-ul-Hind Maulana Mahmud Hasan) சொந்தமான புனித சால்வை மற்றும் தொப்பியை முத்தாகிக்கு அவரது குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். ஷேக்-உல்-ஹிந்த் மௌலானா மஹ்மூத் ஹசன், ஒரு இந்திய முஸ்லிம் அறிஞர் மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தின் ஆர்வலர் ஆவார், அவர் டெல்லியில் ஜாமியா மில்லியா […]

இந்தியா செய்தி

ஆந்திராவில் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்

  • October 15, 2025
  • 0 Comments

ஆந்திராவின் கோனசீமா (Konaseema) மாவட்டத்தில் 35 வயது நபர் ஒருவர் தனது இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பி.காமராஜு என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் சில நபர்களால் துன்புறுத்தப்பட்டு வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. “காமராஜு சிலரால் துன்புறுத்தப்பட்டு வருவதாக எங்களுக்கு முதற்கட்ட தகவல் உள்ளது. அவரது மனைவியும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சில தகராறுகளுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டார்,” என்று காவல்துறை அதிகாரி ராகுல் குறிப்பிட்டுள்ளார். […]