இலங்கை

திசை காட்டி எம்பி-க்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்

  • October 29, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை (Jagath Manuwarna) கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு இரண்டு வழக்குகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து, கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (29) இந்த உத்தரவைப் பிறப்பித்தார். சந்தேக நபர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி தனது கட்சிக்காரர் தேசிய காணி விநியோக திட்டத்தில் பங்கேற்றதால் இன்று […]

பொழுதுபோக்கு

விக்ரமுக்கு ஜோடியாகும் விஜய்யின் நாயகி

  • October 29, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் உடலை வருத்தி, ரப்பர் போல் வளைத்து கொடுத்து கஸ்டப்பட்டு தனித்துவமான கதைகளை தேர்வு செய்து நடித்து, பிரபலமானவர் சியான் விக்ரம். கடைசியாக இவர் நடிப்பில், வெளியான ‘வீர தீர சூரன்’ கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே போல் முதலுக்கு மோசம் இல்லாத லாபத்தையும் தயாரிப்பாளருக்கு பெற்று கொடுத்தது. இதை தொடர்ந்து, விக்ரம் தற்போது தன்னுடைய 63-ஆவது படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்க உள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. தற்போது வரை இந்த படத்தின் […]

உலகம்

தென்கொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ள அமெரிக்கா

  • October 29, 2025
  • 0 Comments

தென் கொரியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக(reached) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(29) தெரிவித்ததாக யோன்ஹாப்(Yonhap) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்திற்கு முன்னதாக இன்று பிற்பகல் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-ம்யுங்குடன்(Lee Jae-myung ) உச்சிமாநாடு கூட்டங்களை நடத்துவதற்காக, தென் கொரிய தலைநகர் சியோலில்(Seoul) இருந்து சுமார் 330 கி.மீ தென்கிழக்கே உள்ள கியோங்ஜூவுக்கு(Gyeongju) டிரம்ப் வருகை வந்தார். லீ ஏற்பாடு செய்த […]

இலங்கை

நுவரொலியாவில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

  • October 29, 2025
  • 0 Comments

நுவரெலியா டொப்பாஸ் காட்டு பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கி இறந்து கீழே விழுந்த நிலையில் சடலம் ஒன்று இன்று (29) மீட்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (28) மாலை நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொப்பாஸ் காட்டு பகுதியில் இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற பொதுமக்களுக்கு ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக குறித்த சடலத்தை கண்டு நுவரெலியா காவல்துறையினருக்கு தகவல் […]

உலகம்

தென்கொரியாவில் சந்திக்கும் ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் ( Xi Jinping)!

  • October 29, 2025
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ( Xi Jinping) இடையேயான சந்திப்பு நாளை நடைபெறும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பு தென் கொரியாவின் பூசானில் (Busan) நடைபெற உள்ளது. இந்த மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் சீனத் தலைவர்களுக்கு இடையே  சந்திப்பொன்று  திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட்  (Scott Besant) முந்தைய சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்க மற்றும் சீன […]

ஐரோப்பா

உக்ரைனில் நீல நிறமாக மாறிய நாய்கள் ; ஆச்சரியத்தில் விலங்கு பராமரிப்பு குழு

  • October 29, 2025
  • 0 Comments

உக்ரைனின் செர்னோபிலில்(Chernobyl) உள்ள நாய்கள் திடீரென நீலநிறமாக மாறியிருப்பது, விலங்கு பராமரிப்பு குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. டாக்ஸ் ஆஃப் செர்னோபில்(Talks of Chernobyl) என்ற தொண்டு நிறுவனம் பகிர்ந்த இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த நாய்கள் 1986 செர்னோபில் அணுசக்தி பேரழிவிற்குப் பிறகு அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களின் சந்ததியை சேர்ந்தவை.இந்த நாய்கள் மனித நடமாட்டம் இல்லாத இந்தப் பகுதியில் வனவிலங்குகளுடன் வாழ்கின்றன. ‘டாக்ஸ் ஆஃப் செர்னோபில்’ அமைப்பு இங்கு உள்ள சுமார் […]

ஐரோப்பா செய்தி

கடல் அலைகளை தூண்டி சுனாமியை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த அணுவாயுதத்தை சோதனை செய்த ரஷ்யா!

  • October 29, 2025
  • 0 Comments

கடல் அலைகளை தூண்டி சுனாமியை ஏற்படுத்தும் சக்தி கொண்ட, யாராலும் தடுக்க முடியாத சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை ரஷ்யா நீருக்கடியில்  இன்று சோதனை செய்துள்ளது. ‘போஸிடொன் (Poseidon) எனப்படும் அணு டார்பிடோவை (nuclear torpedo) சோதனை செய்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். இந்த டார்பிடோவானது 1,600 அடி  கடல் ஆழத்தில் பிரித்தானியாவை மூழ்கடிக்கும் திறன் கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சோதனை முயற்சியை குறிப்பிடத்தக்க வெற்றி என அறிவித்த புட்டின், இதனை இடைமறிக்கவோ […]

ஐரோப்பா செய்தி

ட்ரம்பின் முடிவால் ஆபத்தில் சிக்கிய ஐரோப்பிய நாடு! கைவிட்ட அமெரிக்கா!

  • October 29, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளின் வான்வெளிக்குள் ரஷ்யா அத்துமீறும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியை அமெரிக்கா பாதுகாப்பது முக்கியமானது என சர்வதேச அரசியல் நோக்குநர்கள் தெரிவித்துள்ளனர். ருமேனியாவில் அமெரிக்கா தனது துருப்புக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டங்களை வெளியிட்டுள்ள நிலையில் அரசியல் அவதானிகளின் இந்த கருத்து வந்துள்ளது. ருமேனியா, உக்ரைனுக்கு அருகாமையில் உள்ளமையால் அமெரிக்கா மேற்படி தனது முடிவை அறிவித்திருந்தது. ‘அமெரிக்க இராணுவப் படைகளின் உலகளாவிய நிலையை மறுமதிப்பீடு செய்யும் செயல்முறையின் ஒரு பகுதியாக, நேட்டோவின் கிழக்குப் […]

பொழுதுபோக்கு

மீண்டும் பென்ஸில் அதிரடி காட்ட வருகின்றார் லியோ – எலிசா?

  • October 29, 2025
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸும் வில்லனாக நிவின் பாலியும் நடித்து வருகின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படமான பென்ஸில் மூன்று பெண் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க நடிகை மடோனா செபாஸ்டியனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. LCU எனப்படும் லோகேஷ் கனகராஜ் திரைப்பட கதைகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் படமாகவே பென்ஸ் உருவாகி வருகிறது. இதனால் லியோவில் விஜய்யின் தங்கையாக வந்த […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் பலர் கைது!

  • October 29, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்த பெரும்பாலான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத வேலைகளைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக  உள்துறை அலுவலகம் டேக்அவே (takeaways), ஓட்டுநர்கள், அழகு நிலையங்கள் மற்றும் கார் கழுவும் இடங்களை  குறிவைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 1,050 க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சட்டவிரோதமாக வேலை செய்வோரை கைது செய்வதற்காக  63 சதவீதத்திற்கும்   அதிகமான கைது […]