ஐரோப்பா செய்தி

உக்ரைனில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பிரிட்டிஷ் நாட்டவர் கைது

  • October 29, 2025
  • 0 Comments

பிரித்தானியாவை சேர்ந்த முன்னாள் இராணுவ பயிற்றுவிப்பாளர் ஒருவரை, உக்ரைன் இராணுவத்தை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி கைது செய்துள்ளதாக கிய்வ்(Kyiv) தெரிவித்துள்ளது. குறித்த நபர் உக்ரைனின் பாதுகாப்புப் படைகள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை ரஷ்யாவிற்கு வழங்கியதாகவும் பயங்கரவாதச் செயல்களைச் செய்யத் தயாராகி வந்ததாகவும் உக்ரைன் பாதுகாப்பு சேவை (SBU) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவ பயிற்றுவிப்பாளர், 2024ம் […]

இலங்கை செய்தி

பெல்ஜியத்தில் இருந்து திருகோணமலைக்கு அஞ்சல் மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருள்

  • October 29, 2025
  • 0 Comments

திருகோணமலை பிரதான தபால் நிலையத்தில் மெண்டி(Mandy) என்ற போதைப்பொருளை கொண்ட 02 பொதிகளை திருகோணமலை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரொருவரையும் கைது செய்துள்ளனர். குறித்த பொதிகளை பெற்றுக்கொள்ள திருகோணமலை தபால் அலுவலகத்துக்கு வருகை தந்த 26 வயது பொன்னுத்துரை பனவன் என்பவர் துறைமுக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு போதைப்பொருள் பொதிகளும் பெல்ஜியம்(Belgium) நாட்டிலிருந்து அஞ்சல்(Post) மூலம் திருகோணமலை பிரதான தபால் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது துபாயில்(Dubai) உள்ள திருகோணமலையின் மூதூர்(Muthur) நகரைச் […]

உலகம் செய்தி

கனடாவில் பிரபல தொழிலதிபரை கொன்ற லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்

  • October 29, 2025
  • 0 Comments

கனடாவில் ஒரு கார் மீது லாரன்ஸ் பிஷ்னோய்(Lawrence Bishnoi) கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் தர்ஷன் சிங் சாஹ்சி கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில்(Abbotsford) உள்ள தொழிலதிபரின் வீட்டிற்கு வெளியே இடம்பெற்றுள்ளது. பண கோரிக்கையை மறுத்ததால் தர்ஷன் சிங் சாஹ்சி கொலை செய்யப்பட்டதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த கோல்டி தில்லான்(Goldy Dhillon) குறிப்பிட்டுள்ளார். பஞ்சாபின் லூதியானாவைச் சேர்ந்த 68 வயதான தர்ஷன் சிங் சாஹ்சி, ஆடை மறுசுழற்சியில் முன்னணி […]

உலகம் செய்தி

சவூதி அரேபியாவில் வீடியோ அழைப்பில் தற்கொலை செய்து கொண்ட இந்தியர்

  • October 29, 2025
  • 0 Comments

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர்(Muzaffarnagar) மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது நபர் ஒருவர், இந்தியாவில் தனது மனைவியுடன் வீடியோ அழைப்பின் போது சவுதி அரேபியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீடியோ அழைப்பின் போது மனைவியான 21 வயது சானியா உடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ரியாத்தில்(Riyadh) உள்ள தனது வீட்டின் கூரையில் ஆஸ் முகமது அன்சாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு, அவரது மனைவி சவுதி அரேபியாவில் வசிக்கும் உறவினர்களுக்குத் தகவல் அளித்ததை அடுத்து […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் வரலாற்றிலேயே வித்தியாசமான வைல்ட் கார்ட்

  • October 29, 2025
  • 0 Comments

பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. 20 பேருடன் தொடங்கிய பிக்பாஸில் தற்போது 16 பேர் உள்ளனர். இந்த வாரம் லாக்கர் டாஸ்க் நடைபெறுகிறது. இதில் அனைவருக்கும் தனித்தனி யூனிஃபார்ம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அணிந்து போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி கொண்டிருக்கிறார்கள். பொதுவாக பிக்பாஸில் வைல்டு கார்ட் எண்ட்ரி 50வது நாளின் அருகில் இருக்கும். ஆனால் இந்த சீசனில் 30 நாட்கள் கூட […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய தாக்குதல் – 9 பேர் காயம்

  • October 29, 2025
  • 0 Comments

தெற்கு உக்ரைனின் கெர்சனில்(Kherson) உள்ள ஒரு குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய தாக்குதல் நடத்தியதில் நான்கு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் மூன்று மருத்துவ ஊழியர்களும் 9 வயது சிறுமியும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், ஏனையோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கெர்சன் ஆளுநர் ஒலெக்சாண்டர் புரோகுடின்(Oleksandr Prokudin) குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், “மருத்துவ நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைப்பது போர் அல்ல, இது முற்றிலும் பயங்கரவாதம் மற்றும் சர்வதேச மனிதாபிமான […]

செய்தி விளையாட்டு

மழை காரணமாக ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான முதல் T20 போட்டி ரத்து

  • October 29, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில், கடந்த வாரம் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில், இன்று கான்பெர்ராவில்(Canberra) உள்ள மனுகா ஓவல்(Manuka Oval) மைதானத்தில் முதலாவது T20 போட்டி ஆரம்பமானது. நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அந்த வகையில், முதலில் களமிறங்கிய […]

செய்தி

துருக்கியில் இடிந்து விழுந்த 07 மாடிக் கட்டடம் – இருவர் உயிரிழப்பு!

  • October 29, 2025
  • 0 Comments

துருக்கியின்  கோகேலியில் (Kocaeli) நகரத்தில், இன்று  அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் உயிரிழந்ததாக  தெரிவிக்கப்படுகிறது. 7 அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்றே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.   இதில் 05 பேர்  இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த துருக்கியின் மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கி பலியான ஹயூருனிஸ்ஸா (Hayrunissa) என்ற சிறுமி மற்றும் அவரது சகோதரர் முகமது எமிர் (Mehmet Emir) ஆகியோரது உடல்களை மீட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில், பலியான […]

உலகம் செய்தி

பிரேசிலில் (Brazil) காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையில் 132 பேர் பலி – ஐ.நா கண்டனம்!

  • October 29, 2025
  • 0 Comments

பிரேசிலின் (Brazil) ரியோ டி ஜெனிரோவில் ( Rio de Janeiro) போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை குறிவைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் குறைந்தது 132 பேர் கொல்லப்பட்டதாக மாநில பொது பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. சுமார் 2,500 காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய இந்த சோதனை நடவடிக்கையில்  93 துப்பாக்கிகள் மற்றும் அரை டன்னுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 60 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பொது பாதுகாப்பு அலுவலகம் 40 பேரின் […]

இலங்கை செய்தி

இலங்கை சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட கைதி!

  • October 29, 2025
  • 0 Comments

குளியாப்பிட்டிய சிறைச்சாலையில் இன்று (29) மதியம் கைதி ஒருவர்   தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தவுடன், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரை காப்பாற்ற முடியாமல்போனதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இறந்தவர் அரேபொலவில் உள்ள சிரிபெல்ல பகுதியைச் சேர்ந்தவராவார். சந்தேக நபருக்கு எதிராக கொள்ளை தொடர்பான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சந்தேக நபர் ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக அடையாள அணிவகுப்புக்கு […]