“குழந்தைக்கு நான் தான் அப்பா” உண்மையை ஒப்புக்கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா விவகாரத்திற்கு ஒரு முடிவு இல்லையா? என புலம்பிக்கொண்டு இருந்தவர்களுக்கு இன்று ஒரு பதில் கிடைத்துவிட்டது. மகளிர் ஆணையத்தின் விசாரணையில், மாதம்பட்டி ரங்கராஜ், “ஜாய் கிரிஸில்டாவைக் காதலித்து திருமணம் செய்ததாகவும், குழந்தைக்கு நானே அப்பா” என்றும் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த தகவலை ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிஸில்டா இவர்களுக்கு இடையே இருந்த உறவு குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்தன. சமீபத்தில் ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அவர், குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்து பல தகவல்களையும் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்து இருந்தார். தற்போது குழந்தைக்கு […]













