இலங்கை

நான்கு உயிர்கள் பறிபோன சோகம்!

  • November 5, 2025
  • 0 Comments

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன  04 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிரிபத்கொடையில் இருந்து சிலாபத்திற்கு இன்று (5) சுற்றுலா சென்ற 10 பேர் கொண்ட குழுவினர்  அங்கு தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்தனர். இந்நிலையில் அவர்களில் 5 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். அவர்களில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து காணாமல் போன ஏனையவர்களை தேடும் நடவடிகையில் காவல்துறையினர், காவல்துறை உயிர் காப்பு பிரிவினர், […]

இலங்கை

நுகேகொட பேரணியில் பங்கேற்கப்போவதில்லை – எம்.ஏ.சுமந்திரன்!

  • November 5, 2025
  • 0 Comments

” நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்குமாறு தமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவ்வாறு அழைப்பு விடுத்தால்கூட அதில் பங்கேற்கப்போவதில்லை எனவும் அவர் கூறினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்ற பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே சுமந்திரன் மேற்படி தகவலை வெளியிட்டார். ‘ எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு […]

ஐரோப்பா செய்தி

தனது மாமாவை போர்களத்தில் இருந்து மீட்க கோரிக்கை வைத்த சிறுமி – செவிகொடுப்பாரா புட்டின்!

  • November 5, 2025
  • 0 Comments

ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த போர் நிலைமையால் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார். ரஷ்யாவில் படுகாயம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படாமல் மீளவும் போர் களத்திற்கு அனுப்பப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் மொஸ்கோவின் ரெட் சதுக்கத்தில் நடத்த நிகழ்வொன்றில் 11 வயது சிறுமி ஒருவர் புட்டினிடம் தனது மாமாவை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே போரில் தனது தந்தையை இழந்த அவர், தற்போது தனது […]

பொழுதுபோக்கு

இலங்கை வந்தார் பிரபல தென்னிந்திய நடிகர் சரத்குமார்

  • November 5, 2025
  • 0 Comments

பிரபல தென்னிந்திய நடிகர் சரத்குமார் இன்று (05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் வந்த இவர், நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை ஒரு சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக அவரது வருகை உள்ளது. சரத்குமார் நாளை கண்டி, தெல்தெனிய, உடிஸ்பத்துவ பகுதியில் உள்ள 7 நட்சத்திர விருந்தகம் ஒன்றுக்கு செல்லவுள்ளார். அத்துடன், கொழும்பு, காலி போன்ற பகுதிகளுக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார். இதேவேளை, சரத்குமாரின் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் பாதசாரிகள் மீது மோதிய கார் – 10 பேர் படுகாயம்!

  • November 5, 2025
  • 0 Comments

பிரான்ஸில் நபர் ஒருவர் பாதசாரிகள் மீது கார் ஒன்றால் மோதி இன்று தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் தாரி  “அல்லாஹு அக்பர்” என்று கத்திக்கொண்டே இந்த தாக்குதல்களை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை தொடர்ந்து  ஓட்டுநர் வாகனத்தை தீக்கிரையாக்க முயன்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். படுகாயம் அடைந்தவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக  காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் பயங்கரவாதத் தாக்குதலாக […]

பொழுதுபோக்கு

பொங்கல் ரேஸில் குதித்த பெரிய தலைகளின் படங்கள்…. விஜய்யுடன் நேரடியாக மோதும் பிரபாஸ்

  • November 5, 2025
  • 0 Comments

இந்திய அளவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்னதாக தி ராஜா சாப் படம் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில ஊடகங்கள் வெளியீட்டுத் திகதியில் மாற்றம் வரலாம் என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது, […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் தொடரும் அரசாங்க பணி நிறுத்தம் – வான்வெளியை மூட திட்டம்!

  • November 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் அரசாங்க பணி நிறுத்தம் நீடித்தால் விமான போக்குவரத்து கடும் சிக்கல்களை எதிர்நோக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் வான்வெளியின் சில பகுதிகளை மூடுவதாக அமெரிக்க போக்குவரத்து செயலாளர் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய பயண இடையூறுகளைத் தூண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போக்குவரத்து செயலாளர், “நீங்கள் பெருமளவில் விமான தாமதங்களைக் காண்பீர்கள். பெருமளவில் ரத்து செய்யப்படுவதை நீங்கள் காண்பீர்கள், மேலும் வான்வெளியின் சில பகுதிகளை நாங்கள் மூடுவதை நீங்கள் காணலாம். விமானப் […]

இலங்கை

நீண்டகால பிரச்சினையை தீர்க்க இந்திய – இலங்கை அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – சஜித்!

  • November 5, 2025
  • 0 Comments

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நீண்டகாலமாக மீன்பிடித் தகராறு இருந்து வருவதாகவும், சர்வதேச சட்டத்தின்படி செயல்படுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வைக் காண இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ‘இந்தோ-இலங்கை இருதரப்பு உறவுகள்’ என்ற தலைப்பில் ANI செய்தி நிறுவனத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது இந்தக் கருத்தைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய நாடுகள் சபையின் […]

ஐரோப்பா செய்தி

ஸ்கொட்லாந்தில் (Scotland) நில விற்பனை – அரசாங்கம் தலையிட வேண்டும் என கோரிக்கை!

  • November 5, 2025
  • 0 Comments

ஸ்கொட்லாந்தில் (Scotland)  தனியார் நில விற்பனையில் அரசாங்கம் தலையிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் சில தனியார் நிறுவனங்கள் அல்லது பிரஜைகள் இடையே அதிகளவிலான நிலங்கள் காணப்படுவதை  நிவர்த்தி செய்ய விரும்புவதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். நில உரிமையாளர்கள் மற்றும் சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இந்த திட்டங்கள் சர்ச்சைக்குரியவை என விமர்சித்துள்ளனர். இந்த செயற்பாடு கிராமப்புற வணிகங்களை பாதிக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் பலர் இந்த திட்டங்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச் செல்ல வலியுறுத்துகின்றனர். ஸ்கொட்லாந்தில் நிலம் […]

பொழுதுபோக்கு

பான் வேர்ல்டு AA22xA6 படத்தின் இசை அமைப்பாளரை அறிவித்தார் அல்லு அர்ஜுன்

  • November 5, 2025
  • 0 Comments

புஷ்பா படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரபல்யமான அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அல்லு அர்ஜுன் இதற்கு முன் பல படங்களை நடித்திருந்தாலும் தெலுங்கைத் தாண்டி தமிழ், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அவரை அடையாளப்படுத்தியது “புஷ்பா” என்று கூறலாம். இந்த நிலையில், அட்லீ இயக்கும் அல்லு அர்ஜுனின் 22ஆவது படமான AA22xA6 பான் இந்திய படமாக இல்லாமல், பான் வேர்ல்டு படமாக உருவாக இருக்கிறது. இப்படம் சுமார் 800 […]