உலகம் செய்தி

எகிப்தில் சுற்றுலா பயணிகள் பயணித்த பேருந்து விபத்து – இருவர் பலி!

  • November 11, 2025
  • 0 Comments

எகிப்தில் சுற்றுலா பேருந்து ஒன்று லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். செங்கடல் கடற்கரையில் உள்ள ஹுர்காடா (Hurghada) அருகே இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 36 பேர் காயமடைந்துள்ளதாக டெய்லி மெயில் தகவல் வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர் பேருந்தின் ஓட்டுநர் எனவும், மற்றையவர் ரஷ்ய பயணி என்றும் தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம் காயமடைந்தவர்கள் ராஸ் கரேப்பில் ( Ras Ghareb) உள்ள ஒரு மருத்துவமனையில் அவசர […]

பொழுதுபோக்கு

“கும்கி 2” – கதாநாயகனை முட்டித் தள்ளிய யானை – நடந்தது என்ன?

  • November 11, 2025
  • 0 Comments

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான கும்கி படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி உள்ளது. படம் வரும் 14ஆம் திகதி ரிலிஸூக்கு தயாராகம் உள்ளது. இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் கதாநாயகன் மதி யானையின் தும்பிக்கையை தனது தோல் மீது வைத்து நடிக்கும் போது யானை நடிகர் மதியை தனது தும்பிக்கையால் முட்டித் தள்ளுகிறது. உடனே அவர் பின்னால் சென்று விழுகின்றார். நல்லவேளை கதாநாயகனுக்கு அடி எதுவும் படவில்லை. தும்பிக்கையால் தள்ளிவிட்டதை […]

செய்தி

சிறுவர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி – உலகளவில் 03ஆம் இடத்தில் இலங்கை சிறுவன்!

  • November 11, 2025
  • 0 Comments

சிறுவர்களுக்கான உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இலங்கையின்   தாவி சமரவீர என்ற சிறுவன் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (ITTF)  இந்த வாரம் வெளியிட்ட  தரவரிசையின்படி, சமரவீர 52 இடங்கள் முன்னேறி 200 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். உகாண்டாவின் ஜோசப் செபதிந்திரா Joseph Sebatindira மற்றும் கத்தாரின் ரபியா அல்-குவாரி  Rabeah Al-Kuwari  ஆகியோரை விட அவர் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

பொழுதுபோக்கு

அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் : ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி

  • November 11, 2025
  • 0 Comments

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில், நடிகர் அஜித்குமார், ரம்யா கிருஷ்ணன், எஸ்.வி.சேகர், சத்தியமூர்த்தி பவன், ஈவிபி பிலிம் சிட்டி ஆகியோரின் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து பொலிஸார், சென்னை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள அஜித்குமாரின் வீட்டிற்கு உடனடியாக அங்கு விரைந்து சென்று, முழு பகுதியையும் சுற்றிவளைத்து பாதுகாப்பு கொடுத்தனர். வெடிகுண்டு […]

இலங்கை

ஏழைகளின் வயிற்றில் அடிப்பு: செல்வந்தர்களுக்கு நிவாரணம்!

  • November 11, 2025
  • 0 Comments

ஏழைகளிடமிருந்து வரி வசூலித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடைமுறையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு- செலவுத் திட்டத்திலுள்ள விடயங்களில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தையேனும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். செல்வந்தர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கும் […]

உலகம்

பாகிஸ்தானில் நீதிமன்ற நுழைவாயிலுக்கு அருகில் குண்டுவெடிப்பு – 12 பேர் பலி!

  • November 11, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே இன்று இடம்பெற்ற  குண்டுவெடிப்பு தாக்குதலில்  குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குண்டு வெடிப்பு தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. தடயவியல் குழுவிடமிருந்து அறிக்கை கிடைத்த பிறகு கூடுதல் விவரங்களை வழங்க முடியும்” என்று அந்நாட்டின் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள மிகவும் பரபரப்பான நீதிமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இந்த தாக்குதல் […]

இலங்கை

வடக்கு மாகாணத்தில் 170 மில்லியன் செலவில் உருவாகும் விளையாட்டு அரங்கம்!

  • November 11, 2025
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் புதிய உட்புற விளையாட்டு அரங்கத்தை நிர்மாணிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. பல தசாப்தங்களாக நிலவிய மோதல்களில் இருந்து  மீண்டு வரும் சமூகத்திற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களிடையே டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும் சதுரங்கம் போன்ற உட்புற விளையாட்டுகளின் வளர்ச்சியை ஆதரிப்பதை இந்த முன்மொழியப்பட்ட வசதி நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி 170 மில்லியன் பொருட் செலவில் உருவாகவுள்ள […]

உலகம்

துப்பாக்கி உரிமம் தொடர்பான சட்ட சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளும் நியூசிலாந்து!

  • November 11, 2025
  • 0 Comments

துப்பாக்கி சட்ட சீர்த்திருத்தங்களை முன்னெடுக்கவுள்ளதாக நியூசிலாந்து இன்று அறிவித்தது. துப்பாக்கி உரிமையை ஒழுங்குபடுத்துவதில் காவல்துறை அதிகாரிகளின் ஈடுபாட்டை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் மசூதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களை தொடர்ந்து துப்பாக்கி ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் துப்பாக்கி உரிமையாளர்களுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இதனை  தணிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதல் நடத்தியவர்  சட்ட அமலாக்க கண்காணிப்பை ஈர்க்காமல் ஏராளமான ஆயுதங்களை சட்டப்பூர்வமாகப் பெற்றுள்ளதாக விசாரணைகளில் […]

இலங்கை செய்தி

“நான் சர்வாதிகாரியெனில் இராணுவ ஆட்சி மலர்ந்திருக்கும்” – பொன்சேகா பகீர் தகவல்!

  • November 11, 2025
  • 0 Comments

ஊழல் வலையமைப்புக்கு முழுமையாக முடிவு கட்டுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதை நாம் ஏற்றாக வேண்டும். அதேபோல ஊழல் வலையமைப்பை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் அதற்குரிய முயற்சி எடுக்கப்படுவதை மதிக்கின்றோம்: […]

பொழுதுபோக்கு

‘அரசன்’ ஆட்டம் ஆரம்பம் : வெற்றி மாறன் கொடுத்த அதிரடி அப்டேட்

  • November 11, 2025
  • 0 Comments

சிலம்பரசன் – வெற்றி மாறன் இணையும் ‘அரசன்’ படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இயக்குனர் வெற்றி மாறன் சமீபத்தில் அரசன் குறித்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதாவது ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு திகதியைத்தான் வெற்றி மாறன் வெளிப்படுத்தியுள்ளார். ஆண்ட்ரியா மற்றும் கவின் நடிக்கும் ‘மாஸ்க்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய வெற்றி மாறன், ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 24 ஆம் திகதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ‘தக் […]