ஐரோப்பா

பணிப்புறக்கணிப்பில் இறங்கிய ஊழியர்கள் – பெல்ஜியத்தில் விமான சேவைகள் இரத்து

  • November 25, 2025
  • 0 Comments

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் (Brussels) விமான நிலையம் உள்வரும் விமானங்களில் 110 விமானங்களை இரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெல்ஜிய அரசாங்கத்தின் சிக்கனத் திட்டங்களை எதிர்த்து பாதுகாப்பு மற்றும் தரைவழி கையாளுதல் ஊழியர்கள் நாடு தழுவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதன்காரணமாகவே மேற்படி விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை புத்தாண்டு காலப்பகுதியில் ரயில்வே தொழிலாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பா

போர் நிறுத்தம் – அமெரிக்காவின் 28 அம்ச பரிந்துரைகளை ஏற்கும் உக்ரைன்!

  • November 25, 2025
  • 0 Comments

அமெரிக்கா முன்மொழிந்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகையுடன் ‘பொதுவான புரிதல்’ எட்டப்பட்டதாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ருஸ்டெம் உமெரோவ் (Rustem Umerov) கூறியதை தொடர்ந்து அமெரிக்க அதிகாரி ஒருவர் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் (Donald Trump) ஒப்பந்தத்தை இறுதி செய்ய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) விரைவில் அமெரிக்காவிற்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா முன்வைத்துள்ள 28 அம்ச கோரிக்கைகள் […]

ஐரோப்பா

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீவிபத்து – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • November 25, 2025
  • 0 Comments

லண்டனின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சில்லறை விற்பனை நிலையத்தின் சேமிப்பு கிடங்கில்  இன்று  தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சவுத்தாலில் (Southall) உள்ள சேமிப்பு கிடங்களில் முதற்கட்டமாக தீ பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மாடி கட்டமைப்புகளில் ஒன்றில் பட்டாசுகள் மற்றும் சிலிண்டர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக அருகிலுள்ள பள்ளி மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் வெளியேற்றப்பட்டுள்ளன. மேலும் பெரிய புகை மூட்டம் […]

ஐரோப்பா செய்தி

குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்குமாறு உத்தரவிட்ட இத்தாலிய நீதிமன்றம்!

  • November 25, 2025
  • 0 Comments

மூன்று குழந்தைகள் காடுகளில் வளர்க்கப்பட்ட நிலையில், அந்த குழந்தைகளை  பெற்றோரிடம்  இருந்து பிரித்து வைக்குமாறு இத்தாலி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்’அக்விலாவில் ( L’Aquila) உள்ள ஒரு சிறார் நீதிமன்றம் கடந்த வாரம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரித்தானிய – ஆஸ்திரேலியவை பிறப்பிடமாக கொண்ட குறித்த தம்பதியர் ஆஃப்-தி-கிரிட் வாழ்க்கை முறை (off-the-grid)  முறையில் தங்களின் மூன்று குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளனர். அப்ருஸ்ஸோ (Abruzzo) பகுதியில் உள்ள தங்கள் பண்ணை வீட்டில் அவர்கள் தங்களின் மூன்று குழந்தைகளையும் […]

பொழுதுபோக்கு

”பராசக்தி”- யின் ‘ரத்னமாலா’ பாடல் வெளியானது…

  • November 25, 2025
  • 0 Comments

சிவகார்த்திகேயனின் 25ஆவது படமான ‘பராசக்தி’ படத்திலிருந்து 2 ஆவது பாடலான ‘ரத்னமாலா’ தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அடுத்தாண்டு பொங்கல் விடுமுறைக்கு இப்படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான ‘அடி அலையே’ ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ‘பராசக்தி’ படத்தின் 2-வது பாடலான ‘ரத்னமாலா’ தற்போது வெளியாகியுள்ளது.  

பொழுதுபோக்கு

திடீரென பிக் பாஸ் வீட்டுக்குள் கீர்த்தி சுரேஷ்…

  • November 25, 2025
  • 0 Comments

இப்போது எல்லாம் ஒரு படம் ஹிட் ஆக வேண்டும் என்றால் படத்தில் நடித்தவர்கள் உட்பட அனைவரும் பாடுபட்டு புரொமோஷன் செய்கின்றார்கள். அந்த வகையில், தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது, இதற்கு ப்ரமோஷன் செய்ய பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார் நம்ம கீர்த்தி. இரவில் திடீரென சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷுக்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வாரம் பிக் பாஸ் […]

இலங்கை

மாவீரர் துயிலுமில்லத்தை தூய்மைப்படுத்த சென்றவர்களை தாக்கிய இராணுவத்தினர்!

  • November 25, 2025
  • 0 Comments

மணலாறு பகுதியில் உள்ள துயிலுமில்லம் ஒன்றில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பணிக் குழுவினரை  இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கியால் அடித்து தாக்கியுள்ள சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலாறு பகுதியில் உள்ள உதயபீடம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளை செய்ய சென்ற பொதுமக்கள் மீதே இவ்வாறு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம்  இன்று இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினரும், அளம்பில் புலனாய்வு துறையினரும் இணைந்து மக்களை துப்பாக்கியால் தாக்கி அடித்து விரட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் […]

இலங்கை

கொழும்பில் வேன் ஒன்றில் மோதி 05 வயது குழந்தை உயிரிழப்பு!

  • November 25, 2025
  • 0 Comments

கொழும்பில் உள்ள மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 5 வயது குழந்தை வேன் ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளது. குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை  சாலையை நோக்கி ஓடியபோது,  ​​இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் குழந்தைக்கு மேலோட்டமான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சிறிது நேரத்தில் இரத்த வாந்தி எடுத்ததால், வேன் ஓட்டுநர்  அவரை கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனையில் […]

ஐரோப்பா

460 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய ரஷ்யா – 06 பேர் உயிரிழப்பு!

  • November 25, 2025
  • 0 Comments

ரஷ்யா  ஒரே இரவில் குறைந்தது 460 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் பல மால்டோவா அல்லது ருமேனியாவிற்குள் பறந்ததாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ( Volodymyr Zelenskyy) இன்று அறிவித்துள்ளார். அதனால் ஒவ்வொரு நாளும் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதை அனைத்து கூட்டாளிகளும் மறந்துவிடக் கூடாது எனவும் செலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஆக்கிரமிப்பாளர் மீதான தடை அழுத்தம் எவ்வளவு முக்கியமோ, அதே போல் ஆயுதங்களும் வான் பாதுகாப்பும் முக்கியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களில் […]

இலங்கை

ஜே.வி.பியின் செயலருக்கு எதிராக லண்டனில் போராட்டம்: அரசு கூறுவது என்ன?

  • November 25, 2025
  • 0 Comments

புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களில் சிறுகுழுவினரே போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த குழுவானது ஒட்டுமொத்த புலம்பெயர் இலங்கையர்களை பிரதிபலிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக லண்டனின் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. புலம்பெயர் மக்களின் ஆதரவை அரசாங்கம் இழந்துவிட்டதா எனவும் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ புலம்பெயர்ந்த […]