இலங்கை

பதுளை மாவட்டத்தின் 06 இடங்களில் நிலச்சரிவு – 04 பேர் உயிரிழப்பு!

  • November 27, 2025
  • 0 Comments

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் ஆறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காணாமல்போயுள்ளதாக  பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக அபேவர்தன தெரிவித்தார். நேற்று (26) ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இந்த நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக மாவட்டச் செயலாளர் கூறியுள்ளார். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

சீரற்ற வானிலை – உயர்தரப் பரீட்சைகள் இடைநிறுத்தம்!

  • November 27, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்றும் (27), நாளையும் திட்டமிட்டப்படி உயர்தர பரீட்சைகள் நடைபெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். பரீட்சை நடைபெறும் திகதிகள் குறித்து வேட்பாளர்களுக்கு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். மேலும், இது தொடர்பில் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்திய சேகரிப்பு மையங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் தலைமைப் பரீட்சார்த்திகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளை மூட உத்தரவு

  • November 26, 2025
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தை பாதித்துள்ள அசாதாரண வானிலை மற்றும் நிலவும் சூறாவளி அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர் இன்று (27) முதல் மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளை மறு அறிவிப்பு வரும் வரை மூட உத்தரவிட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கு இந்த முடிவு தடையாக இருக்காது என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, பல முக்கிய சாலைகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நிலச்சரிவில் […]

ஐரோப்பா செய்தி

ஹாங்காங்(Hong Kong) தீ விபத்து – பலி எண்ணிக்கை 36ஆக உயர்வு(UPDATE)

  • November 26, 2025
  • 0 Comments

ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 275க்கும் மேற்பட்டோர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹாங்காங்கின்(Hong Kong) வடக்கு தை போ(Tai Po) மாவட்டத்தில் உள்ள உயரமான குடியிருப்பு வளாகத்தின் மூன்று தொகுதிகளில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தொடர்புடைய செய்தி ஹாங்காங் (Hong Kong) தீவிபத்து – பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

இந்தியா செய்தி

ஹரியானாவில் பயிற்சியின் போது இளம் கூடைப்பந்து வீரர் உயிரிழப்பு

  • November 26, 2025
  • 0 Comments

ஹரியானாவின்(Haryana) ரோஹ்தக்கில்(Rohtak) 16 வயது தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர் ஒருவர் பயிற்சியின் போது கூடைப்பந்து கம்பம் அவரது மார்பில் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். லகான் மஜ்ராவில்(Lakhan Majra) உள்ள மைதானத்தில் ஹர்திக் ரதி(Hardik Rathi) தனியாக பயிற்சி செய்து கொண்டிருந்தபோது கம்பம் உறுதியாக இல்லாததால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது நண்பர்கள் அவருக்கு உதவ விரைந்த போது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன், காங்க்ராவில்(Kangra) நடந்த 47வது ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப், ஹைதராபாத்தில்(Hyderabad) […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் அதிகரிக்கும் பாலின வன்முறையை எதிர்த்து மாட்ரிட்டில்(Madrid) மக்கள் பேரணி

  • November 26, 2025
  • 0 Comments

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தன்று ஸ்பெயின்(Spain) முழுவதும் நடைபெற்ற 40க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக மாட்ரிட்டில்(Madrid) ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். இந்த ஆண்டு இதுவரை 38 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த பேரணியில் உயிரிழந்த பெண்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில், குறித்த பேரணியில் ஸ்பெயினின் சமத்துவ அமைச்சர் அனா ரெடோண்டோ(Ana Redondo) உட்பட […]

உலகம் செய்தி

ஷேக் ஹசீனாவின் வங்கி பெட்டகத்தில் இருந்து 10 கிலோ தங்கம் பறிமுதல்

  • November 26, 2025
  • 0 Comments

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்குச்(Sheikh Hasina) சொந்தமான வங்கி பெட்டகத்தில்(Locker) இருந்து சுமார் $1.3 மில்லியன் மதிப்புள்ள சுமார் 10 கிலோகிராம் (22 பவுண்டுகள்) தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வங்கதேச(Bangladesh) ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செப்டம்பரில் பறிமுதல் செய்யப்பட்ட பெட்டகத்தை திறந்த பிறகு இந்த கண்டுபிடிப்பு நடந்ததாக தேசிய வருவாய் வாரியத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (CIC) அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், ஹசீனா பதவியில் இருந்தபோது பெற்ற சில பரிசுகளை, சட்டத்தின்படி, “தோஷகானா” […]

இலங்கை செய்தி

கொழும்பு-பதுளை ரயில் பயணங்களில் மாற்றம்

  • November 26, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, கொழும்பு கோட்டைக்கும்(Colombo Fort) பதுளைக்கும்(Badulla) இடையிலான அனைத்து மலையக ரயில் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை நானுஓயா(Nanu Oya) ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. நிலவும் பாதகமான வானிலை காரணமாக மலையக ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கொழும்பு கோட்டை நிலையத்திலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்ட இரவு அஞ்சல் ரயில் நானுஓயா நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், பதுளையிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும் இரவு […]

உலகம் செய்தி

பிட் புல்(pit bull) நாய்களால் கொல்லப்பட்ட 23 வயது அமெரிக்க மாணவி

  • November 26, 2025
  • 0 Comments

டெக்சாஸ்(Texas) பல்கலைக்கழகத்தின் மாணவியான 23 வயது மேடிசன் ரிலே ஹல்(Madison Riley Hull), டெக்சாஸின் டைலரில்(Tyler) உள்ள அவரது வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட மூன்று பிட் புல்(pit bull) நாய்கள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். நவம்பர் 21 அன்று அவசர சேவைகளுக்கு அழைப்பு வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டில் மேடிசன் ரிலே ஹல் இறந்து கிடந்ததை கண்டுள்ளனர். பின்னர் பிட் புல்களில் ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது, மற்ற இரண்டு நாய்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளது. “மேடிசன் […]

உலகம் செய்தி

திருப்பதி கோயிலுக்கு 9 கோடி நன்கொடை அளித்த அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியர்

  • November 26, 2025
  • 0 Comments

அமெரிக்காவைச்(America) சேர்ந்த இந்தியர் ஒருவர் திருப்பதி(Tirupati) தேவஸ்தானத்திற்கு ரூ.9 கோடி நன்கொடை அளித்ததாக கோயில் அமைப்பின் தலைவர் பி.ஆர். நாயுடு(PR.Naidu) தெரிவித்துள்ளார். “திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டிடங்களின் புதுப்பிப்புக்காக எம். ராமலிங்க ராஜு ரூ.9 கோடி நன்கொடை அளித்தார்” என்று பி.ஆர். நாயுடு X பதிவில் குறிப்பிட்டுள்ளார். ராமலிங்க ராஜு நன்கொடை வழங்குவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக 2012ல் 16 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாக நாயுடு தெரிவித்துள்ளார். பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதில் பங்களித்ததற்காக […]