இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு!

  • November 27, 2025
  • 0 Comments

கடுமையான வானிலை மற்றும் கனமழை அடுத்த இரண்டு நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அந்தந்த மாவட்டங்களில் ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை மதிப்பிடுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். […]

இலங்கை

தேசிய பேரிடர் நிலையை அறிவிக்குமாறு சஜித் வலியுறுத்தல்!

  • November 27, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் நிலையை அறிவிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோது, ​​இந்த கோரிக்கையை முன்வைத்ததாக பிரேமதாச தெரிவித்தார். “பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி தேசிய பேரிடர் நிலைமை அறிவிக்கப்பட்டால், பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்பதால், இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். “தேசிய பேரிடர் நிலையை அறிவிக்க ஏற்பாடு […]

ஐரோப்பா

தன்னார்வ இராணுவ சேர்க்கை – மக்ரோன் வெளியிடவுள்ள முக்கிய தகவல்!

  • November 27, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்துவரும் போர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரான்ஸ் புதிய இராணுவ சேவை திட்டத்தை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ( Emmanuel Macron)   இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஞ்சு இளைஞர்களுக்கு தன்னார்வமாக இராணுவத்தில் பணியாற்ற ஒரு புதிய விருப்பத்தை வழங்குவதற்கான தனது நோக்கத்தை மக்ரோன் ஆண்டின் தொடக்கத்தில் வெளிப்படுத்திய நிலையில் புதிய அறிவிப்பு வரவுள்ளது. ரஷ்யாவின் போர் ஐரோப்பிய கண்டத்தை “பெரும் ஆபத்தில்” ஆழ்த்தியதால், பிரான்ஸ் தனது பாதுகாப்பை அதிகரிக்க முயற்சி செய்வதாக அந்நாட்டின் ஜனாதிபதி […]

உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

  • November 27, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமார் 6.6 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு வானிலை ஆய்வுத் துறை வலியுறுத்தியுள்ளது. இதேவேளை நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் இல்லை என்று திணைக்களம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உலகம்

சீனாவில் தொழிலாளர்கள் மீது மோதிய ரயில் – 11 பேர் பலி!

  • November 27, 2025
  • 0 Comments

சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங்கில் (Kunming) ரயில்வே தொழிலாளர்கள் மீது ரயில் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. ரயில்வே தொழிலாளர்கள் பூகம்பக் கண்டறிதல் கருவிகளை சோதித்துப் பார்த்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய ரயில் வளையமைப்பை சீனா கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான பயணங்களை […]

இலங்கை

சீரற்ற வானிலை – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

  • November 27, 2025
  • 0 Comments

நவம்பர் 17 முதல் நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும், 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெய்த கனமழை, வெள்ளம் மற்றும் பலத்த காற்று காரணமாக 4,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பாதகமான வானிலை காரணமாக ஏற்படும் எந்தவொரு அவசரகால சூழ்நிலைகளையும் 117 என்ற அவசர தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு […]

பொழுதுபோக்கு

கணவர் மறைவால் தவிக்கும் ஹேமமாலினி : வைரலாகும் உருக்கமான பதிவு

  • November 27, 2025
  • 0 Comments

பாலிவுட்டின் பிரபல நடிகர் தர்மேந்திரா நவம்பர் 24 அன்று காலமானார். தர்மேந்திராவின் மறைவுக்குப் பிறகு மனைவி ஹேமமாலினியின் முதல் பதிவு வெளியாகியுள்ளது. ஹேமமாலினி தனது கணவர் தர்மேந்திராவை நினைத்து ஒரு நீண்ட பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், ‘தரம் ஜி, எனக்கு பல விஷயங்களில் துணையாக இருந்தார். அன்பான கணவர், எங்கள் இரு மகள்கள் ஈஷா மற்றும் அஹானாவின் தந்தை, நண்பர், தத்துவஞானி, வழிகாட்டி, கவிஞர், தேவைப்படும் நேரங்களில் எல்லாம் என்னுடன் இருந்தவர் – உண்மையில், அவர் எனக்கு […]

பொழுதுபோக்கு

“அதுவொரு சின்ன மரணத்தின் ஒத்திகை” புதிதாக பிறந்தார் வைரமுத்து

  • November 27, 2025
  • 0 Comments

இன்றைய காலக்கட்டத்தில் பல துறைகளில் பல்லாயிரக்கணக்கான புதிய இளைஞர் யுவதிகள் இடம்பிடித்துவிட்டனர். என்னதான் கவிப்பேரரசாக இருந்தாலும் ஒரு காலக்கட்டத்திற்குப்பின் ஒதுங்கியிருந்து புதியவர்களுக்கு இடம் கொடுக்கத்தான் வேண்டும். இந்த வகையில் ஒரு கலக்கட்டத்தில் கொடிகட்டிப்பறந்த வைரமுத்து தற்போது வாய்ப்புகள் பாதியாக குறைந்துவிடவே பொழுதை எவ்வாறு போக்குவது என்று யோசித்து வருகின்றார். தன் மீது எத்தனை முறைப்பாடுகள் கிசுகிசுக்கள் வந்தாலும் உடையாமல் இன்றுவரை தலைநிமிர்ந்து தனது கருத்துக்களை வெளியிடுபவர்தான் வைரமுத்து. அந்த வகையில், அண்மையில் சோத்துப்பாறை அணைக்கு சென்றிருந்த அவர், […]

பொழுதுபோக்கு

படம் ஓடவில்லை : ஹீரோக்களை குறை கூறும் ஹீரோயின்கள்

  • November 27, 2025
  • 0 Comments

தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான De De Pyaar De 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை அள்ளியுள்ளார். இந்த நிலையில் பேட்டியொன்றில் கலந்து கொண்டு பேசிய இவர், “ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஸ்பைடர் படத்தில் நடிக்கப்போகிறோம் என்ற வாய்ப்பு […]

உலகம்

ஹாங்காங் தீவிபத்து – 18 மணிநேரமாக தொடரும் போராட்டம் : 44 பேர் பலி!

  • November 27, 2025
  • 0 Comments

ஹாங்காங்கின்  (Hong Kong)  தாய் போ  (Tai Po)  மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. 279 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 மணி நேரத்திற்கும் மேலாக எரிந்து வரும் தீயை அணைக்க 800க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கிட்டத்தட்ட 2,000 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 4,600 குடியிருப்பாளர்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மூன்று கட்டுமான […]