இலங்கை செய்தி

விமானப்படையினாரால் பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் மீட்பு

  • November 28, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக அனுராதபுரத்தின் அவுகன பகுதியில் கலா வெவா வெள்ளப்பெருக்க்கில் நேற்று மாலை முதல் தென்னை மரத்தின் மேல் சிக்கித் தவித்த ஒருவரை , இன்று 28 .11.2025 ஹிங்குராக்கொட விமானப்படைத் தளத்தின் 7வது படைப்பிரிவைச் சேர்ந்த பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் விமானப்படையின் மீட்பு குழுவினர் மீட்டனர். மேலும் மன்னம்பிட்டிய பாலத்தில் சிக்கி 06 பேரையும் மீட்பதற்கான நடவடிக்கையும் மேற்கொண்டனர்.

இலங்கை செய்தி

பதுளை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது

  • November 28, 2025
  • 0 Comments

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலனிலை காரணமாக பதுளை மாவட்டங்களில் பல பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் பல வீதிகளின் போக்கு வரத்து தடைப்பட்டுள்ளது. இன்று காலை மண்சரிவினால்அப்புத்தளை எட்டம்பிட்டிய,பண்டாரவளை விதி பதுளை கொழும்பு பிரதான வீதியில் அப்புத்தளை பண்டாரவளைக்கு இடையில் கோணமுட்டவ பகுதியின் பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் மொணராகல கும்பகன்ன பாடசாலை முற்றாக நீரில் முழ்கப்பட்டுள்ளது. மலையக தொடருந்து பாதையும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தை பொருத்தவரையில் பல பிரதேசங்கள் மழையினால் […]

இலங்கை செய்தி

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

  • November 28, 2025
  • 0 Comments

தீவை பாதித்துள்ள பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தெற்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களை உள்ளடக்கி அனர்த்த நிவாரணக் குழுக்கள் இன்று (2025 நவம்பர் 28,) கடற்படையால் கடமையில் ஈடுத்தப்பட்டுள்ளன, மேலும் இந்த நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள், அனர்த்த முகாமைத்துவ மையத்துடன் இணைந்து, 2025 நவம்பர் 27 ஆம் திகதிக்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட 911 […]

இலங்கை

வரலாற்றில் ஏற்படாத அதி அபாயகரமான வெள்ள நிலை குறித்து எச்சரிக்கை

  • November 28, 2025
  • 0 Comments

களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளில் அண்மைய வரலாற்றில் ஏற்படாத மட்டத்திலான அதி அபாயகரமான வெள்ள நிலைமை குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. களனி கங்கை ஆற்றுப்படுகை பகுதிகளில் உள்ள நீரோட்டப் பிரதேசங்களில் பல இடங்களில் தற்போது அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது. இந்த நிலைமையிலிருந்து உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள மிகுந்த கவனத்துடன் செயற்படுமாறும், அதிகபட்ச பாதுகாப்பான இடங்களை நோக்கி முடிந்தவரை விரைவாகச் செல்லுமாறும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

மண்மேடு சரிந்ததில் 3 மாத குழந்தை உட்பட மூவர் மரணம்

  • November 28, 2025
  • 0 Comments

நாவலப்பிட்டி பழைய ரயில் முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் மூன்று மாத குழந்தை மற்றும் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டி பிரதேசத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பிரதேச செயலாளர் ரம்யா […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் “டிட்வா” புயலின் கோரத்தாண்டவம் : 56 பேர் மரணம்

  • November 28, 2025
  • 0 Comments

இலங்கையில் உருவாகியுள்ள டிட்வா புயல் தற்போது தனது கோரத்தாண்டவத்தை ஆரம்பித்துள்ளது. தற்போது இந்த புயல் வாழைச்சேனைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுதும் ஏற்பட்டுள்ள அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 21 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 12,313 குடும்பங்களை சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தொடர்ந்து பெய்து வரும் […]

பொழுதுபோக்கு

“உடனடியாக நீக்க வேண்டும்” டியூட் படக்குழுவுக்கு அதிரடி உத்தரவு

  • November 28, 2025
  • 0 Comments

இயக்குனராக முதல் படத்திலேயே வெற்றி கண்டு தற்போது நடிகராகவும் வெற்றிப்பாதையில் செல்கின்றார் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் இதுவரை வெளியான மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளன. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் டியூட். இப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற இளம் இயக்குநர் இயக்கி இருந்தார். அப்படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களான நூறு வருஷம் பாடல் மற்றும் கருத்தமச்சான் பாடல் ஆகியவை இடம்பெற்று இருந்தன. […]

பொழுதுபோக்கு

ஆஸ்கர் 2026 போட்டியில் குதித்த மஹாவதார் நரசிம்மா

  • November 28, 2025
  • 0 Comments

2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில் பரிசீலனையில் உள்ள 35 அனிமேஷன் திரைப்படங்களின் பட்டியலை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் புராண அனிமேஷன் திரைப்படமான ‘மஹாவதார் நரசிம்மா’, 98வது அகாடமி விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் பந்தயத்தில் நுழைந்து உலக அரங்கில் முத்திரை பதித்துள்ளது. அஸ்வின் குமார் இயக்கி, ஷில்பா தவான் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரித்துள்ள மஹாவதார் நரசிம்மரின் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மாவீரர் நாள் – இனப்படுகொலைக்கு நீதி கோருகின்றனர்

  • November 27, 2025
  • 0 Comments

மாவீரர் நாள் இன்று இலங்கையிலும் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்கள் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கின்றனர். பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு ஐரோப்பிய ஆசிய நாடுகளில் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. மாவீரர் நாளை அனுஷ்டிக்க இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுமதிக்க முடியாதென திட்டவட்டமாக நிராகரித்திருந்தது. என்றாலும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அரசாங்கம் போரில் […]

பொழுதுபோக்கு

சுந்தர் சி விலகியது ஏன்? லதா ரஜினிகாந்த் ஓபன் டாக்

  • November 27, 2025
  • 0 Comments

சுந்தர்.சி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பற்றிய தகவல் வெளிவந்து சில நாட்களுக்குள் சுந்தர் சி திடீரென இப்படத்திலிருந்து விலகினார். இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறிய விடயம் தான் தற்போது ஹைலைட். “அது அவருடைய தொழில் சம்பந்தப்பட்ட விஷயம். அதைப் பற்றி நான் கூற விரும்பவில்லை” என்றார். கோவாவில் நடை பெறும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் […]