இலங்கை செய்தி

பாடசாலைகளை மீளவும் திறக்கும் திகதி அறிவிப்பு!

  • December 9, 2025
  • 0 Comments

மேல், தெற்கு, வடக்கு, சபரகமுவ, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் செவ்வாய்க்கிழமை (16) மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவே இன்று இதனை அறிவித்துள்ளார். இதற்கமைய நாட்டில் உள்ள 10,076 பாடசாலைகளில், 9,929 பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 147 பாடசாலைகளை மீளவும் திறக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் […]

உலகம்

அதிகரிக்கும் எல்லைப் பதற்றம் – கம்போடியாவில் 07 பொதுமக்கள் பலி!

  • December 9, 2025
  • 0 Comments

தாய்லாந்துடனான சமீபத்திய மோதலில் கம்போடியாவில் குறைந்தது 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள்  இன்று  தெரிவித்துள்ளனர். மேலும் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக 20,000 பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் கோயில் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் அழிவடைந்துள்ளதுடன், பொது சேவைகளை சீர்குலைந்துள்ளதாக கம்போடிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பெரிய தாக்கங்களுக்கு மேலதிகமாக, தாய்லாந்து இராணுவம் எல்லையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கம்போடிய பொதுமக்கள் குடியிருப்புகளில் பல்வேறு வகையான […]

இலங்கை

உயர் தரப்பரீட்சை நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டது

  • December 9, 2025
  • 0 Comments

சீரற்ற காலநிலையால் இடைநிறுத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குறிப்பிட்டார். அதேநேரம் ஏனைய வகுப்புகளுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்காக மாத்திரம் மூன்றாம் தவணை பரீட்சை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா கருத்து & பகுப்பாய்வு செய்தி

புகலிடக் கோரிக்கையாளர்கள் மூலம் பிரித்தானியாவுக்கு போதைப்பொருள் அச்சுறுத்தல்.

  • December 9, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் தி டெலிகிராஃப் (The Telegraph) பத்திரிகை வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையின்படி, சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மூலமாக, நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தல் சடுதியாக அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய உள்துறை அலுவலகம் மற்றும் தேசிய குற்றவியல் நிறுவன அதிகாரிகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செய்தி வெளியாகியுள்ளது. பிரித்தானியாவிற்குள் வட பிரான்ஸிலிருந்து வரும் சில புகலிடக் கோரிக்கையாளர்கள், போதைப்பொருள் வில்லைகளை விழுங்கி, அவற்றை பிரித்தானியாவில் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்களிடம் ஒப்படைப்பதற்கு இணங்கினால், […]

உலகம்

இந்தோனேசியாவில் 07 மாடிக் கட்டடத்தில் தீவிபத்து – 17 பேர் பலி!

  • December 9, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் (Jakarta)  அமைந்துள்ள கட்டடத்தில் இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏழு மாடிக் கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.  

இலங்கை

ரணில் கைது செய்யப்பட்ட விடயத்தில் அரசியல் தலையீடுகள் இருந்ததா?

  • December 9, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட  விடயத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை என  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “விக்கிரமசிங்கவின்  கைது நியாயமானதா என்பது ஆதாரங்களைப் பொறுத்தது, மேலும் அது சரியான செயல்முறை மூலம் நீதிமன்றத்தில் சோதிக்கப்பட வேண்டும். ஊடகங்கள் அல்லது அரசியல் அழுத்தம் மூலம் அல்ல. பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களில் ஊழல் […]

உலகம்

MH370 விமானம் – மாயமான 08 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு!

  • December 9, 2025
  • 0 Comments

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு  மலேசிய ஏர் லைன்ஸ் விமானத்தில் பயணம்  செய்த நிலையில் காணாமல்போன 08 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2.9 மில்லியன் யுவான் ($410,000) இழப்பீடு வழங்க வேண்டும் என பெய்ஜிங் (Beijing) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், தங்கள் அன்புக்குரியவரின் மரணம், இறுதிச் சடங்கு செலவுகள் மற்றும் உணர்ச்சி ரீதியான துயரத்தால் ஏற்பட்ட சேதங்களுக்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு என்ன […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ட்ரம்பின் வர்த்தக போருக்கு மத்தியில் சீனாவின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு  

  • December 9, 2025
  • 0 Comments

ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான ஏற்றுமதி அதிகரித்துவரும் நிலையில், சீனாவின் வர்த்தக உபரி 1 ரில்லியின் அமெரிக்க டொலர்களைத் ($US1 trillion) தாண்டியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தக் போர் காரணமாக , வரிகளைத் தவிர்க்கும் நோக்கில் உற்பத்தியாளர்கள் அமெரிக்காதவிர ஏனைய சந்தைகளை இலக்கு வைத்து செயல்பட்டுவருகின்றனர். இந்நிலையிலேயே சீனாவின் ஏற்றுமதி வருமானம் எகிறியுள்ளது. அத்துடன், ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான ஏற்றுமதிகளும் அதிகரித்துள்ளன. கடந்த நவம்பர் மாத தரவுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவுக்கான […]

இலங்கை

இடர் முகாமைத்துவ பொறிமுறையை மாற்றுமாறு வலியுறுத்து! 

  • December 9, 2025
  • 0 Comments

பேரிடரில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இடர் முகாமைத்துவ பொறிமுறையை நாம் மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட நிலையில் அடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்தவேளையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ காலநிலை மாற்றங்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக ஏற்படும் அனர்த்தங்கள் மற்றும் அபாயங்கள் குறித்து தெரிவிக்கும் முறையான முன்னெடுப்பு நடவடிக்கை […]

இலங்கை

மத்திய மாகாணத்தில் பேரிழப்பு: 351 பேர் உயிரிழப்பு! 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!

  • December 9, 2025
  • 0 Comments

டித்வா புயலையடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் மத்திய மாகாணம் பேரிழப்பை சந்தித்துள்ளது. உயிரிழப்பு மற்றும் உடமை இழப்பு என்பன இம்மாகாணத்திலேயே அதிகளவு இடம்பெற்றுள்ளன. இலங்கையில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதே மத்திய மாகாணமாகும். கண்டி மாவட்டத்தில் 234 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர், மாத்தளை மாவட்டத்தில் 28 பேர் என பேரிடரால் மத்திய மாகாணத்தில் 351 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்படி மூன்று மாவட்டங்களிலும் மொத்தமாக 127 பேர் காணாமல்போயுள்ளனர். நுவரெலியா, […]