ஐரோப்பா

இரண்டு சீன நிறுவனங்களுக்கு தடை விதித்த பிரித்தானியா!

  • December 10, 2025
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் இரண்டு சீன நிறுவனங்களுக்கு  தடை விதித்துள்ளது. ரஷ்யாவிற்கு ஆதரவாக தகவல்களை திரித்ததாகவும்,  இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான சைபர் தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாகவும் அந்நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐரோப்பா முழுவதும் ஜனநாயகங்களை சீர்குலைக்கவும், நமது முக்கியமான தேசிய உள்கட்டமைப்பை பலவீனப்படுத்தவும், நமது நலன்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட கலப்பின அச்சுறுத்தலை நாம் காண்கிறோம் என பிரித்தானிய வெளியுறவுத்து தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த நிறுவனங்கள் கிரெம்ளினுக்கு ஆதரவாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதைகளை […]

அரசியல் இலங்கை செய்தி

மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களுக்கு இடமில்லை!

  • December 10, 2025
  • 0 Comments

“ அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.” என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய தெரிவித்தார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார். “ அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கான பொதுவான திட்டமொன்றை முன்வைத்து, அதற்கேற்பச் செயற்பட வேண்டும். கொழும்பு மாவட்டத்தினுள் ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களின் […]

இலங்கை செய்தி

16 ஆயிரம் கால்நடை பண்ணைகள் சேதம்!

  • December 10, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் 16 ஆயிரம் கால்நடை பண்ணைகள் சேதமடைந்துள்ளன என்று கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றுள் கோழி பண்ணைகளே அதிகம் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சேதமடைந்துள்ள பண்ணைகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்படவுள்ளது. அதேவேளை, பெருமளவான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

இலங்கை செய்தி

இலங்கையை புரட்டிபோட்ட தித்வா புயல்: 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!

  • December 10, 2025
  • 0 Comments

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 203 பேர் காணாமல்போயுள்ளனர். 5 ஆயிரத்து 350 வீடுகள் முழமையாகவும், 86 ஆயிரத்து 882 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 27 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன. மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த […]

அரசியல் இலங்கை செய்தி

தித்வா புயல் கரையை கடந்தாலும் “அரசியல் புயல் ஓயவில்லை”!

  • December 10, 2025
  • 0 Comments

  நாட்டில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன், இது விடயத்தில் எங்கு தவறு நடந்துள்ளது என்பது பற்றி ஆராய்வதற்குரிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு விரைவில் நிறுவப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஓரிரு நாட்களுக்குள் சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் கூறியவை வருமாறு, “அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே தெரிந்தும் அது […]

செய்தி விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணி வெற்றி

  • December 9, 2025
  • 0 Comments

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இந்த சுற்றுப்பயணத்தின் T20 தொடர் கட்டாக்கில் உள்ள பரபாட்டி மைதானத்தில் இன்று ஆரம்பமானது. இந்நிலையில், நாணய சுழற்சியை வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்கள் பெற்றது. இந்திய அணி சார்பில், ஹர்திக் பாண்ட்யா(Hardik […]

உலகம் செய்தி

நோர்வேயில் நடைபெறவிருந்த மரியா கொரினா மச்சாடோவின் செய்தியாளர் சந்திப்பு ரத்து

  • December 9, 2025
  • 0 Comments

நோர்வேயின்(Norway) ஒஸ்லோவில்(Oslo) நடைபெறும் நோபல் பரிசு வழங்கும் விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக, வெனிசுலா((Venezuela) எதிர்க்கட்சித் தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோவின்(Maria Corina Machado) திட்டமிடப்பட்ட செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரின் இருப்பிடம் தெளிவாகத் தெரியவில்லை மற்றும் விருதை நேரில் பெற முடியுமா என்பது தெளிவாகத் தெரியாததால் நோர்வே நோபல் நிறுவனம் நிகழ்வை ரத்து செய்தது. முதலில் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு (GMT […]

உலகம் செய்தி

ஹாங்காங்(Hong Kong) தீ விபத்து – பலி எண்ணிக்கை 160ஆக உயர்வு

  • December 9, 2025
  • 0 Comments

பல தசாப்தங்களில் ஹாங்காங்கில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில் மேலும் ஒரு உடல் அடையாளம் காணப்பட்ட பிறகு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த தீ விபத்தில் சிக்கிய ஆறு பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாத இறுதியில் வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இது 1980ம் ஆண்டுக்குப் பிறகு உலகின் மிக மோசமான குடியிருப்பு கட்டிட தீ […]

உலகம் செய்தி

அடியாலா சிறைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இம்ரான் கானின் சகோதரிகள்

  • December 9, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின்(Imran Khan) சகோதரிகள் அடியாலா(Adiala) சிறைக்கு வெளியே ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உஸ்மா கான்(Usma Khan) மற்றும் அலீமா கான்(Aleema Khan) ஆகியோர் சிறை வாயில்களுக்கு வெளியே கூடி, இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், முன்னாள் பிரதமர் பலவீனமானவராகவும் தனிமைப்படுத்தப்பட்டவராகவும் தோன்றியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். டிசம்பர் 2ம் திகதி அடியாலா சிறையில் இம்ரான் கானை சகோதரி உஸ்மா கான் சந்தித்த சில […]

உலகம் செய்தி

சீனாவில் லஞ்சம் வாங்கிய முன்னாள் வங்கியாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

  • December 9, 2025
  • 0 Comments

சீனாவில்(China) அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒரு உயர் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிக்கு ஊழல் குற்றச்சாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனா ஹுவாரோங்(Huarong) இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸின்(CHIH) முன்னாள் பொது மேலாளர் பாய் தியான்ஹுய்(Bai Tianhui), 2014 மற்றும் 2018 க்கு இடையில் $156 மில்லியனுக்கும் அதிகமாகப் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். மேலும், பாய் தியான்ஹுய் தனது செல்வாக்கு மிக்க பதவியை மற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தி, அதற்கு பதிலாக பெரும் தொகைகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]