உலகம்

அதிகரிக்கும் எல்லைப் பதற்றம் – கம்போடியாவில் 07 பொதுமக்கள் பலி!

தாய்லாந்துடனான சமீபத்திய மோதலில் கம்போடியாவில் குறைந்தது 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள்  இன்று  தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக 20,000 பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் கோயில் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் அழிவடைந்துள்ளதுடன், பொது சேவைகளை சீர்குலைந்துள்ளதாக கம்போடிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பெரிய தாக்கங்களுக்கு மேலதிகமாக, தாய்லாந்து இராணுவம் எல்லையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கம்போடிய பொதுமக்கள் குடியிருப்புகளில் பல்வேறு வகையான நீண்ட தூர வெடிமருந்துகளை ஏவியுள்ளதால், மேலும் துயரங்களும் சேதங்களும் ஏற்பட்டு வருவதாக கம்போடிய அதிகாரிகள்  குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே கம்போடியப் படைகள் தங்கள் துருப்புக்களை தாக்கி வருவதாகவும், குண்டுவீச்சு ட்ரோன்கள் மற்றும் காமிகேஸ் ட்ரோன்களைப் பயன்டுத்துவதாகவும் தாய்லாந்து இராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்