மத்திய கிழக்கு

இஸ்ரேலுடனான அமைதியைப் பேணுவதற்காக அர்பெல் யெஹூட்டை விடுவிக்கவுள்ள ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பு, வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஜனவரி 31) தாங்கள் பிணைக்கைதியாகப் பிடித்து வைத்துள்ள ஆர்பெல் யெஹுட் எனும் பெண் உட்பட மூன்று பிணைக்கைதிகளை விடுவிக்கவிருக்கிறது.

காஸா போர் தொடர்பில் சமரசப் பேச்சு நடத்திவரும் கத்தார் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 26) அத்தகவலை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ஜனவரி 27) காலை வட காஸாவில் அப்பகுதி மக்கள் வீடு திரும்ப தாங்கள் அனுமதிக்கப்போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

பொதுமக்களில் ஒருவரான ஆர்பெல் யெஹுட், ராணுவ வீரர் ஏடம் பர்ஜர் உட்பட மூன்று பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஞாயிற்றுக்கிழமையன்று உறுதிப்படுத்தினார். வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட காஸா மக்கள் திங்கட்கிழமை காலை முதல் வட காஸாவில் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.

கத்தாரின் அறிவிப்பு வெளியானதும் போர் நிறுத்தத்தின் முதற்கட்டத்தில் விடுவிக்கப்படவுள்ள இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் குறித்த தேவையான தகவல்களை சமரசப் பேச்சாளர்களிடம் சமர்ப்பித்துள்ளதாக ஹமாஸ் திங்கட்கிழமையன்று சொன்னது.

இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 47,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்று காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஹமாஸ் 250 பேரைப் பிணை பிடித்து வைத்தது. அத்தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து ஹமாஸ்-இஸ்ரேல் போர் மூண்டது. தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.