பிரிட்டிஷ் யூதர்களை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – லிபரல் வலியுறுத்தல்
பிரிட்டிஷ் யூதர்களைப் பாதுகாக்க அரசு உடனடி மற்றும் வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சித் தலைவர் எட் டேவி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் பிரதமர் ஸ்டார்மருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
யூத-எதிர்ப்பு சம்பவங்களை எதிர்கொள்ள புதிய செயல் திட்டம் அறிமுகப்படுத்த வேண்டும், யூத சமூகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்,
மேலும் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) அமைப்பை தடை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
“இது ஒரு தேசிய அவசரநிலை. பிரித்தானியாவில் யூத மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும். அவர்களுக்கு எதிரான வன்முறையும் அச்சுறுத்தலும் நிறுத்தப்பட வேண்டும்,” என எட் டேவி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.





