பிரான்ஸில் வன்முறை: ஊரடங்கு உத்தரவு அமுல்
பிரான்ஸ் முழுவதும் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து, வார இறுதியில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களையடுத்து, சில உள்ளாட்சி நிர்வாகப் பகுதிகளில் ஊரடங்கை அமுல்படுத்துமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாகவும் அரசாங்கம் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.
ஊரடங்கு தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு Sebastien Lecornu , நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தும் சாத்தியக்கூறுகளை நிராகரிக்கவில்லை.
எனினும், தற்போதைய சூழ்நிலையில் நாடு முழுவதும் அவசரநிலையை அமுல்படுத்துவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளூர் ரீதியிலான ஊரடங்குகளை அமல்படுத்துவதே பொருத்தமானது எனத் தெரிவித்தார். எந்தெந்த நகரங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்பது தொடர்பில் அவர் விபரங்களை வெளியிடவில்லை.
பிரான்ஸில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு ஆறு மாதங்களே உள்ள நிலையில், இந்தச் சம்பவங்கள் நாட்டில் அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளன. அத்துடன், பலவீனமடைந்த பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் அரச கடன் ஆகியனவும் நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு அழுத்தம் சேர்த்துள்ளன.




