செய்தி பொழுதுபோக்கு

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார்.

மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார்.

‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’ உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் கார்த்திக் சபேஷ் நடித்துள்ளார்.

டயாலிசிஸ் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த இரண்டு வாரங்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு அவர் உயிரிழந்தார்.

கார்த்திக்கின் தந்தையான சபேஷும் பிரபல இசையமைப்பாளர் ஆவார். தனது சகோதரர் முரளியுடன் இணைந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், தனது சகோதரரான தேவாவின் திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி இசையமைப்பாளர் தேவா காலமான நிலையில், அவரது மறைவின் துயரிலிருந்து குடும்பத்தினர் மீள்வதற்குள் கார்த்திக் சபேஷின் மரணமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக் சபேஷுக்கு ரம்யா கார்த்திக் என்ற மனைவியும், பிரிஷானிதாரா, ஹைரானிதாரா என்ற இரு மகள்களும் உள்ளனர். மேலும், கீதா சபேஷ், அர்ச்சனா சபேஷ் என்ற இரு சகோதரிகளும் உள்ளனர்.

அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணியளவில் சென்னையின் வளசரவாக்கம் மயானத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்குத் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி