உலகம்

பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து – 32 தொழிலாளர்கள் மரணம்

பாகிஸ்தானில்    நிலக்கரி சுரங்கத்தில் இடம்பெற்ற  வெடி விபத்தில் குறைந்தது 32  தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் 10 பேர் காணாமல்போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவின் (Quetta) புறநகர்ப் பகுதியில் நேற்று இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த வெடி விபத்தானது மீத்தேன் வாயுவின் தேக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவசரகால மீட்புக் குழுவினர் வருகை தந்ததுடன், ஆரம்பத்தில் 07 உடல்களை மீட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து மேலும் 25 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மீதமுள்ளவர்களைக் கண்டறிந்து மீட்கும் பணியில் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சிக்கியுள்ள அனைத்து சுரங்கத் தொழிலாளர்களும் கண்டறியப்படும் வரை மீட்புப் பணிகள் தொடரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்