இலங்கை செய்தி

8 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!

அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகளுக்கு, பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த தேர்தலுக்கு முன்னர் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பொதுச்செயலாளரை கொண்டிருக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார்.

எனவே, அடுத்த தேர்தலுக்கு முன்னர் இந்தப் பிரச்சினையை அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி , ஐக்கிய மக்கள் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்டவையே பொதுச் செயலாளர் பதவி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளவையாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இரு அணிகளும் பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் உரிமை கோரிவருகின்றன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை