செய்தி விளையாட்டு

ஊக்கமருந்து சோதனை!! இரண்டு ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களுக்கு தடை

ஊக்கமருந்து தடுப்புச் சட்டத்தை மீறியதாகக் குற்றம்சாட்டி, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் இரண்டு வீரர்கள் மீது அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகக் குழு தடை விதித்துள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் சட்டத்தின் கீழ் வெஸ்லி மாடவேரே மற்றும் பிராண்டன் மௌட்டா ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு வீரர்களும் சமீபத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, அடுத்த வருடம் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிக்கு ஜிம்பாப்வே அணி தகுதிபெறத் தவறியதன் காரணமாக பயிற்சியாளர் டேவ் ஹொட்டன் பதவி விலகியுள்ளார்.

அந்த அணி உலக கோப்பைக்கு தகுதி பெறாதது தொடர்பிலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிம்பாப்வே கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் T20 தொடருக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஜனவரி 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி