பொழுதுபோக்கு

கழுத்தை அறுப்போம்… கமலுக்கு கொலை மிரட்டல்

சனாதானத்திற்கு எதிராகப் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு, நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஜி-யுமான மௌரியா, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று இந்த புகாரை அளித்துள்ளார்.

அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், கமல்ஹாசன் சனாதானத்திற்கு எதிராக சில கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சின்னத்திரை நடிகரான ரவிச்சந்திரன், கமல்ஹாசனின் கழுத்தை அறுப்போம் என கொலை மிரட்டல் விடுத்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் காவல் ஆணையரை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்த மிரட்டல் குறித்து காவல் துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்