இலங்கை

இறைச்சியால் ஆபத்து – இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

இலங்கையர்களை இறைச்சி சாப்பிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தில் சுமார் 2000 மாடுகள் தோல் கழலை நோயினால் (Lumpy Skin Disease) பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடமேல் மாகாணத்தின் மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்துவது உகந்ததல்ல என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பதிவாகியிருந்த தோல் கழலை நோய் வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்திலும் தற்போது பரவியுள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் மடலஸ்ஸ, அரக்கியாலை, தொரனகெதர, கெகுனுகொல்ல, தம்பிட்டிய பகுதிகளில் இந்த நோய் பதிவாகியுள்ளது.

இதனிடையே இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்கள பணிப்பாளர் டொக்டர் P.S.S. பெரேரா தோல் கழலை நோய் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

வடமேல் மாகாணத்தில் உள்ள 46 கால்நடைத் திணைக்களங்களில் சுமார் 35 திணைக்களங்களில் நோய் பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பரவும் வேகம், ஆபத்து, ,சேதத்தை கருத்திற்கொண்டு வடமேல் மாகாணத்தில் இருந்து கால்நடைகளை கொண்டு செல்வது சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கால்நடைகளுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக வடமேல் மாகாண ஆளுநரால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content