இந்தியா

நடிகர் சல்மான்கான் வீட்டுக்கு அருகில் பரபரப்பு – 4 முறை துப்பாக்கிச் சூடு

நடிகர் சல்மான்கான் வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ள சல்மான் கான் வீடு, மும்பை – பாந்த்ராவில் அமைந்துள்ளது.

இன்று அதிகாலை இவரது வீட்டு முன்னால் மோட்டார் சைக்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுள்ளனர்.

சத்தம் கேட்டு உடனடியாக வீட்டில் இருந்த காவலாளிகள் வெளியே வந்து பார்த்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பொலிவுட் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content