இலங்கை செய்தி

07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை!

2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது

பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவிட இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்

2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி, கொழும்பு மட்டக்குளிக்கு அருகிலுள்ள கடற்கரையில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டுசெல்லும் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி, சட்டமா அதிபர், பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் உயர் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, பிரதிவாதிகள் தமது சட்டத்தரணி ஊடாக இது தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக் கொள்வதாக நீதிமன்றில் அறிவித்த நிலையில் இவ்வாறு தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை