ஆசியா

சீனாவில் அடுத்தடுத்து பாதிக்கப்படும் சிறுவர்கள்- நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

சீனாவில் சிறுவர்கள் கொத்து கொத்தாக நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இந்த தொற்று கொரோனா போன்று புதுவித கிருமியால் இந்த காய்ச்சல் பரவவில்லை என்று அந்நாடு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா பாதிப்பு ஓய்ந்து வரும் நிலையில், தற்போது நிமோனியா நோய் பாதிப்பைச் சமாளிக்க சீனா போராடி வருகிறது.

அங்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக, பெய்ஜிங், லியோனிங் மாகாணத்தில் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், நிமோனியா பாதிப்பு குறித்து விரிவான விளக்கம் அளிக்க சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு கோரியது. அதற்கு, நாட்டின் வடக்கு பகுதியில் சுவாச பாதிப்பு தொடர்பான நோய்கள் அதிகரித்துள்ளதாகவும் இதற்கு வழக்கமாக பரவக்கூடிய நோய்கிருமிகளே காரணம் என்றும் சீனா விளக்கம் அளித்துள்ளது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்