இலங்கை செய்தி

கொழும்பு, ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலையில் குழந்தை உயிரிழப்பு!! பெற்றோர் குற்றச்சாட்டு

கொழும்பு, ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலையில் குழந்தை ஒன்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அவிசாவளை அபலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் எட்டு மாத வயதுடைய தேஷான் விதுநேத் சுகயீனம் காரணமாக ஆகஸ்ட் 4 ஆம் திகதி அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலதிக சிகிச்சைக்காக ஆகஸ்ட் 5 ஆம் திகதி கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு தேஷான் மாற்றப்பட்டார்.

குழந்தைக்கு நோய் இருப்பதை உறுதி செய்யாமல் யூகத்தின் அடிப்படையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அப்போது கொடுக்கப்பட்ட வலிப்பு எதிர்ப்பு மருந்து காரணமாக தேஷான் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த தேஷன் கடந்த 19ம் தேதி உயிரிழந்தார். தேஷானின் உடல் நேற்று பிற்பகல் குடும்ப மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், மருந்து ஒவ்வாமை காரணமாக குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய மறுத்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை