இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு!
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் மே 2026-ல் 6,873 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஏப்ரல் மாதத்தில் 6,766 மில்லியன் டொலராக இருந்த கையிருப்பு, மே மாதத்தில் 1.6 சதவீதம் அதிகரித்து 6,873 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட அந்நிய செலாவணி மாற்று வசதியின் கையிருப்புகளும் இந்த கையிருப்பு அதிகரிப்பில் அடங்கும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.




