அநுரவின் ஆட்சியை வீழ்த்த சூனியம் செய்யும் பூஜையில் இறங்கிய தேரர்கள்
தற்போதைய ஆட்சியை மூன்று மாதங்களுக்கு பலவீனப்படுத்துமாறு வலியுறுத்தி தேரர்கள் விசேட பூஜைகளை முன்னெடுத்துள்ளனர். விஹாரமகாதேவி பூங்காவில் தேரர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தில் ஒரு கட்டமாக நேற்றைய (20) தினம வஜிரபாணி, உத்பலவண்ண, பஜ்ஜுன்ன மற்றும் மகா வெசமுணி ஆகிய யக்ஷராஜ தேவர்களை விளித்து, புத்த சாசனத்தை அழிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஆட்சியாளர்களைத் தண்டிக்குமாறும், அவர்களின் ஆட்சிப் பலத்தை உடைக்குமாறும், மூன்று மாதங்களுக்குள் தற்போதைய ஆட்சியைப் பலவீனப்படுத்தி நாட்டில் அறநெறிசார் ஆட்சியை ஏற்படுத்துமாறும் வலியுறுத்தி சூனியம் செய்யும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. […]




