செய்தி விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தியது பங்களாதேஷ்!

பங்களாதேஷ் Bangladesh மற்றும் நியூசிலாந்து New Zealand ஆகிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் ODI போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 48.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.

அதிகபட்சமாக தொடக்க வீரரான நிக் கெல்லி 102 பந்துகளில், 83 ஓட்டங்களைப் பெற்றார்.

பங்களாதேஷ் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளரான நஹித் ராணா 10 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 32 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

199 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 35.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 199 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

தன்ஸித் ஹசன் 58 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்களையும், நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 71 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

2ஆவது போட்டியில் பங்களாதேஷ் வென்றதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் 1-1 என சமநிiயில் உள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் நாளை மறுதினம் (23) நடைபெறவுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!