இலங்கை

மின்சாரம் தாக்கியதால் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன்!

திருகோணமலை -குச்சவெளி பகுதியில் மின்சாரம் தாக்கியமையால்  சிறுவனொருவன் ஆபத்தான நிலையில் இன்று (10) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குச்சவெளி சல்லிமுனை என்ற இடத்தில் நபர் ஒருவர்  தோட்ட காணிக்கு மின்சாரத்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுவன் அப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்சார கம்பியில் சிக்கியதாக  ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது

இதேவேளை மின்சார கம்பியில் சிக்குண்ட குறித்த சிறுவனை குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தரம் 09 இல் கல்வி பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்