இந்தியா உலகம் செய்தி

இரு தரப்பு உறவு வலுவடையும்: இந்தியா, இத்தாலி பிரதமர்கள் உறுதி!

இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் ஆழப்படுத்துவதற்கு இரு நாடுகளின் பிரதமர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார்.

அதன்பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

“இந்தியா- இத்தாலி உறவு முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் விரிவடைந்து தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, ஒரு சுமூகமான நட்பிலிருந்து சுதந்திரம், ஜனநாயகம், எதிர்காலத்துக்கான ஒரு பகிரப்பட்ட பார்வை ஆகிய விழுமியங்களில் வேரூன்றிய ஒரு சிறப்பு மூலோபாயக் கூட்டாண்மையாக உருவெடுத்துள்ளது.

இரு நாடுகளின் பொருளாதார ஆற்றல், பல நூற்றாண்டுகள் பழமையான நாகரீக ஞானம் ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் இந்த கூட்டாண்மை ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்று வருகிறது.” என்று இரு நாட்டு தலைவர்களும் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!