இலங்கை

கச்சத்தீவு இலங்கையின் சொத்து : உண்மைக்கு புறம்பான விடயங்களை பேச வேண்டாம்!!

கச்சத்தீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்துவிட வேண்டும். இல்லையேல்,  தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக போராட தயங்க மாட்டோம் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனப் பிரதிநிதி செல்லதுரை நற்குணம் தெரிவித்தார்.

தமிழக அரசியல் களத்தில் மீனவர் பிரச்சினை முக்கிய இடம்பிடித்துள்ளதுடன், விஜய் கச்சத்தீவை மீட்பது பற்றி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் நேற்று  யாழில் உள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அவர்களுக்கு யாழ். மாவட்ட மீனவ மக்கள் சார்பில் நன்றியை கூறிக்கொள்வதோடு சில விடயங்களை கோரிக்கையாக முன்வைக்க விரும்புகிறோம்.

கச்சத்தீவு இலங்கையின் சொத்து. முறைப்படி இலங்கை அதனை பெற்றுக்கொண்டிருப்பது இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழக கடற்றொழில் மக்களுக்கு நன்கு தெரியும்.

இவ்வாறான நிலையில் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்கள்.

நாங்கள் அதை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் தமிழ்நாட்டில் இடம்பெறும் தேர்தல்களில் மீனவ மக்களின் வாக்குகளை பெறுவதற்கு வேட்பாளர்கள் இவ்வாறு பேசுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

தாங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இனி கச்சத்தீவு தொடர்பில் உண்மைக்கு புறம்பான விடயங்களை பேசுவதை நாங்கள் விரும்பவில்லை.

நீங்கள் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுக்க நினைப்பீர்கள். ஆயின் யாழ். மாவட்ட மீனவ சமுதாயமாக நாங்கள் எமது பாரிய எதிர்ப்பினை காட்டுவதற்கு தயங்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!