உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு – சுங்க வரியை மீள செலுத்த தயாராகும் ட்ரம்ப் நிர்வாகம்!
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பில்லியன் கணக்கான டொலர் மதிப்பிலான சுங்க வரிகளைத் திரும்பச் செலுத்தும் செயல்முறையை ட்ரம்ப் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
வரலாற்றிலேயே மிகப்பெரிய திருப்பிச் செலுத்தும் திட்டமாக இது அமையவுள்ளது.
மார்ச் மாதம், அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம், அரசாங்கம் வசூலித்த $160 பில்லியனுக்கும் (£121 பில்லியன்) அதிகமான தொகையைத் திரும்பச் செலுத்துமாறு சுங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் மேற்படி உத்தரவு காரணமாக சுமார் 330,000 இறக்குமதியாளர்கள் தாங்கள் செலுத்திய பணத்தில் ஒரு பகுதியைத் திரும்பப் பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இருப்பினும் சுங்க வரியால் மறைமுகமாக பாதிக்கப்பட்ட தனிப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்டணங்களை பெற விரும்புவோர், “விடுதலை நாள்” சுங்க வரிகளின் கீழ் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இணையத்தளம் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 56,000-க்கும் மேற்பட்ட இறக்குமதியாளர்கள் விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





