பிரித்தானியாவில் 15 வயது சிறுவர்களின் மோசமான நடத்தை – இரு பெண்கள் பாதிப்பு
பிரித்தானியாவில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட இரு பதின்மவயதினருக்கு சிறார் சீர்த்திருத்த பள்ளியில் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த இரு சிறவுர்களும் ஹாம்ப்ஷயரில் உள்ள ஃபோர்டிங்பிரிட்ஜ் (Fordingbridge) என்ற இடத்தில் இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை படம்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் குறித்த சிறுவர்களுக்கு சிறை அல்லாத மென்மையான தண்டனை வழங்கப்பட்டது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்தே மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டது.




