வாழ்வியல்

முதுகு வலி, இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் – ஆண்களுக்கு எச்சரிக்கை

உலக மக்களை பீதியில் ஆழ்த்தும் நோய்களில் புற்றுநோய் மிக முக்கியமானது. புற்றுநோய் ஒரு கொடிய நோயாக பார்க்கப்படுகின்றது. ஆனால் அது ஆரம்ப கட்டங்களில் கண்டறியப்பட்டால், அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆகையால் பல்வேறு வகையான புற்றுநோய்களின் அறிகுறிகள் குறித்த புரிதல் இருப்பது மிக அவசியமாகும்.

சில புற்றுநோய்கள் பாலினத்தைப் பொறுத்து ஆண்களை அதிகம் பாதிக்கின்றன. புரோஸ்டேட், நுரையீரல், குடல், தோல் புற்றுநோய், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் ஆகியவை ஆண்களுக்கு மிகவும் பொதுவானவை என கேன்சர் ரிசர்ச் யுகெ தெரிவித்துள்ளது.

இந்த புற்றுநோய்களில் பெரும்பாலானவை ஆபத்தானவையாக இருக்கின்றன. ஏனெனில் அவை சரியான நேரத்தில் கண்டறியப்படுவதில்லை. இதற்கான அறிகுறிகள் சரியாக தென்படுவதில்லை. இதன் காரணமாக இதற்கான சிகிச்சை கடினமாகிறது. ஆகையால், இந்த வகையான புற்றுநோய்களில் ஆபத்து அதிகரிக்காமல் இருக்க, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள புற்றுநோயின் அறிகுறிகளை நன்கு புரிந்துகொள்வதும், அவை தோன்றினால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பதும் மிக முக்கியம்.

சிறுநீரில் இரத்தம்

சிறுநீர் கழிக்கும்போது இரத்தம் வந்தால், அதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது சிறுநீர்ப்பை புற்றுநோயின் பொதுவான அறிகுறியாக இருக்கலாம். இது குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகமாக காணப்படுகிறது. இந்த நோய் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மலத்தில் இரத்தம்

மலத்தில் இரத்தம் காணப்பட்டாலோ அல்லது குடல் இயக்கத்தின் போது இரத்தப்போக்கு ஏற்பட்டாலோ, அது பெருங்குடல், மலக்குடல் அல்லது குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்தப் பிரச்சனை தொடர்ந்தால், அது தீவிரமடையலாம். ஆகையால், இந்த அறிகுறி தோன்றினால் உடனடியாக மருத்துவரை தொடர்ப்புகொள்வது நல்லது.

குடல் பழக்கத்தில் மாற்றம்

சில நேரங்களில் குடல் பிரச்சினைகள் இயல்பானவையாக இருக்கும். ஆனால் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் அடிக்கடி ஏற்பட்டால், அது குடல் அல்லது மலக்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறி புறக்கணிக்கப்படக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வயிற்று வலி மற்றும் அஜீரணம்

வயிற்றில் லேசான வலி இருப்பது சாதாரணமானதுதான் . ஆனால் வயிற்றின் மேல் பகுதியில் வலி மற்றும் அடிக்கடி அஜீரண பிரச்சனை இருந்தால், அது வயிற்று புற்றுநோயின் தொடக்கமாக இருக்கலாம். இந்த அறிகுறி ஆண்களுக்கு மிகவும் பொதுவானது.

விவரிக்க முடியாத எடை இழப்பு

திடீர் மற்றும் காரணம் இல்லாத எடை இழப்பு புற்றுநோயின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். இது எந்த வகையான புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதுகு வலி

முதுகுவலி பொதுவாக ஒரு தீவிர பிரச்சனை அல்ல, ஆனால் இது புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்பட்டால், இந்த வலி எலும்புகளுக்கு பரவுகிறது. இது முதுகு மற்றும் இடுப்புகளில் உணரப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான