இலங்கை செய்தி

வவுனியாவில் அவலம் – 8 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த 15 வயது சிறுவன்

வவுனியாவில் 8 வயது சிறுவன் ஒருவனை துஸ்பிரயோகம் செய்ததாக 15 வயது சிறுவன் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை முடிவடைந்து மேலதிக வகுப்புக்காக வவுனியா, வெளிக்குளம் பகுதிக்கு சென்ற 8 வயது சிறுவன் ஒருவனை அப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து 15 வயது சிறுவன் ஒருவன் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இதன் பின், 8 வயது சிறுவன் வீடு சென்ற பின் தனக்கு நடந்த சம்பவத்தை வீட்டிற்கு தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த சிறுவன் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வைத்தியசாலை பொலிசாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து 15 வயது சிறுவன் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த வவுனியா பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content