ஆஸ்திரேலிய, இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங்கை Penny Wong சந்தித்து பேச்சு நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கை, ஆஸ்திரேலியா இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, இந்தியப் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு, மற்றும் வர்த்தக-பொருளாதார கூட்டாண்மையை விரிவுபடுத்துவது குறித்தும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரால் நேற்று விருந்தோம்பலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.





