கலிபோர்னியாவில் மர்ம நபரின் சூழ்ச்சி : ஏராளமானோர் பணயக் கைதிகளாக பிடிப்பு!
கலிபோர்னியாவின் பேக்கர்ஸ்ஃபீல்ட் (Bakersfield) நகரின் மையப்பகுதியில் உள்ள வங்கியொன்றில், நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ஏராளமானோரை பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்தை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதுடன், அவரை அணுகுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதுவரை ஒரு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் நகர சபை மற்றும் காவல் தலைமையகம் உள்ளிட்ட அருகிலுள்ள கட்டிடங்கள் பூட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பேக்கர்ஸ்ஃபீல்ட் காவல் துறையின் நெருக்கடி பேச்சுவார்த்தைக் குழு சந்தேக நபருடன் தொலைபேசி மூலம் தொடர்பில் உள்ளது.
அதே நேரத்தில் FBI முகவர்கள் உட்பட ஏராளமான சட்ட அமலாக்கப் பிரிவினர் அப்பகுதியில் குவிந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சாலைகள் மூடப்பட்டுள்ளதால், நகரின் மையப்பகுதியைத் தவிர்க்குமாறும், அவசர சேவைகள் நிலைமையைப் பாதுகாப்பாகக் கையாள அனுமதிக்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.




