ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு கால்கட்டு: ஆஸ்திரேலியா புது வியூகம்

திங்கட்கிழமை கான்பெராவில் நடைபெற்ற நிகழ்வில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் (Anthony Albanese) மற்றும் வனுவாட்டு பிரதமர் ஜோதம் நபாத் (Jotham Napat) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில்' (Nakamal Agreement) கையெழுத்திட்டனர்.

பல மாதங்களாக நீடித்து வந்த இழுபறிக்கு மத்தியில் ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவு நாடான வனுவாட்டு (Vanuatu) ஆகியவற்றுக்கிடையில், 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

திங்கட்கிழமை கான்பெராவில் நடைபெற்ற நிகழ்வில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் (Anthony Albanese) மற்றும் வனுவாட்டு பிரதமர் ஜோதம் நபாத் (Jotham Napat) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில்’ (Nakamal Agreement) கையெழுத்திட்டனர்.

கடந்த 2025 செப்டம்பரில், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பானிஸ் வனுவாட்டு நாட்டிற்கே நேரடியாகச் சென்றிருந்தார்.

ஆனால், இந்த ஒப்பந்தம் தங்களது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்று வனுவாட்டு அரசு அதிகாரிகள் கவலை தெரிவித்ததால், கடைசி நிமிடத்தில் பிரதமர் ஜோதம் நபாத் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து வெளியேறினார்.

தற்போது கிட்டத்தட்ட 10 மாதங்கள் கழித்து, வனுவாட்டு நாட்டின் கவலைகளைப் போக்கும் வகையில் சில விதிகள் தளர்த்தப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

வனுவாட்டு நாட்டில் காலடி எடுத்து வைக்கத் துடிக்கும் சீனாவின் ‘நமேலே ஒப்பந்தத்தை’ (Namele Agreement) முறியடித்து, வனுவாட்டுவின் முதன்மைப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பங்காளியாக ஆஸ்திரேலியாவை நிலைநிறுத்துவதே இந்த நகமால் ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைக் களைய ‘நகமால் குழு’ (Nakamal Committee) ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது கட்டாயம் கூட வேண்டும்.

வனுவாட்டு தனது நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களில் (Critical Infrastructure) சீனா போன்ற மூன்றாம் தரப்பு நாடுகளை இணைக்க விரும்பினால், அது குறித்து முதலில் ஆஸ்திரேலியாவுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

வனுவாட்டுவின் துறைமுகங்கள், தொலைத்தொடர்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தித் துறைகள் எதிலும் வெளிநாட்டு இராணுவத் தலையீடோ அல்லது அங்கீகரிக்கப்படாத அணுகலோ இருக்கக்கூடாது.

தனது மண்ணை வெளிநாட்டு இராணுவத் தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதில் வனுவாட்டு உறுதியாக உள்ளது.

வனுவாட்டு நாட்டிற்குப் பொலிஸ் படைகளின் உதவி தேவைப்பட்டால், 18 பசிபிக் நாடுகளின் கூட்டமைப்பான ‘பசிபிக் போரத்திற்கு’ (Pacific Forum) முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அதேபோல, இயற்கை பேரிடர் காலங்களில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் அடங்கிய ‘பிரான்ஸ்’ (FRANZ) கூட்டணியிடமே முதலில் வனுவாட்டு உதவி கோர வேண்டும்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி