ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரான்ஸின் பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு

பிரான்ஸில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து வார இறுதியில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களையடுத்து, பாரிஸ், லில், நைஸ் உள்ளிட்ட பல நகரங்களின் சில பகுதிகளில் திங்கட்கிழமை ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து வார இறுதியில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களையடுத்து, பாரிஸ், லில், நைஸ் உள்ளிட்ட பல நகரங்களின் சில பகுதிகளில் திங்கட்கிழமை ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக அரசாங்கம் கடும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாரிஸ் நகரம் முழுவதும் பொதுவான ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்திருந்தார். எனினும், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தும் சாத்தியத்தை அவர் நிராகரிக்கவில்லை.

தற்போதைய சூழலில், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளூர்மயப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதே பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பாரிஸ் பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பின்படி, தலைநகரின் சில பகுதிகளில் இரவு 8 மணி முதல் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பிளாஸ் டி லா ரெபுப்ளிக் மற்றும் லெஸ் ஹால்ஸ் பகுதிகளில் இரவு 11 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த பொலிஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, லில், டுவே, வட்டினி மற்றும் டெனான் ஆகிய நகரங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை சிறுவர்களுக்கான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தலைவர்களின் இணக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகத் தரப்பு தெரிவித்துள்ளது.

நைஸ் நகரின் மத்திய பகுதியில் இரவு நேரங்களில் சிறுவர்கள் வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நகரின் மேயர் எரிக் சியோட்டி தெரிவித்துள்ளார்.

மார்செய் நகரில் ஒன்றுகூடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிரான்ஸின் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி மீண்டும் வேலைநிறுத்தங்களையும் பேரணிகளையும் முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளன.

தீவிர இடதுசாரிகள் மீது பிரதமர் குற்றச்சாட்டு

பிரான்ஸில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான அமைதியின்மைக்குத் தீவிர இடதுசாரிக் குழுக்கள் சில காரணமாக இருப்பதாகப் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாட்டில் பாரிய அமைதியின்மையை ஏற்படுத்தத் தீவிர இடதுசாரி இயக்கம் ஒன்று முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி