ஐரோப்பா

இங்கிலாந்தின் கிழக்கு ரயில் பாதையில் கி.பி பயன்படுத்தப்பட்ட தொல்பொருட்கள் கண்டுப்பிடிப்பு

இங்கிலாந்தில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரயில் பாதைனொன்றில், ​​ரோமானியப் பேரரசை அபகரித்தவரான காராசியஸைச் (Carausius ) சித்தரிக்கும் கி.பி. 287-ஆம் ஆண்டைச் சேர்ந்த அரிய நாணயம் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

தொல்பொருள் பாரம்பரியத்தை தேடும் முயற்சியின் ஒரு பகுதியாக பெட்ஃபோர்ட்ஷையர் மற்றும் கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள 1,000 இடங்கள் சோதனை செய்யப்பட்ட நிலையில்,  இந்த நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காராசியஸ், பண மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி மரண தண்டனையை எதிர்கொண்ட பின்னர், கி.பி. 286 முதல் 293 வரை ரோமானியக் கடற்படைக்குத் தலைமை தாங்கினார்.

அத்துடன்  பேரரசர் அன்டோனினஸ் பியஸ் அல்லது மார்கஸ் ஆரேலியஸின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் 2-ஆம் நூற்றாண்டு ரோமானிய நாணயம் ஒன்றும், கி.மு. 50 முதல் கி.பி. 50 வரையிலான காலத்தைச் சேர்ந்த பிற்கால இரும்பு யுக ஜாடி ஒன்றும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், இரண்டு ஆண்டுகளில் இரயில் பாதை நெடுகிலும் 6,000 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

பணிகள் முடிந்த பிறகு, அனைத்து கலைப்பொருட்களும் சுத்தம் செய்யப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, ஆவணப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்