பாதுகாப்பின்மைக்கு அமெரிக்க இராணுவமே காரணம் – ஈரான் உச்ச தலைவர் குற்றச்சாட்டு
மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பின்மைக்கு அமெரிக்காவின் இராணுவ இருப்பும் அதன் கைப்பாவை தளங்களும் முக்கிய காரணம் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டணி ஈரான் மற்றும் பிராந்திய நாடுகளை இலக்குவைத்து மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாகவே இந்நிலை உருவானதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க வெளிநாட்டு படைகள் இருப்பது அந்தப் பகுதியின் பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், அமெரிக்காவின் ஆதரவிலுள்ள தளங்களுக்கு தங்களின் பாதுகாப்பையே உறுதி செய்ய முடியாத நிலையில், அவை அப்பிராந்திய மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என்ற நம்பிக்கையே இல்லை என்றும் ஈரான் உச்ச தலைவர் குறிப்பிட்டுள்ளார்.




