ஐரோப்பா

அமெரிக்க ராப்பரும் பாடகருமான ட்ராவிஸ் ஸ்காட் பாரிஸில் கைது!

ஒலிம்பிக் பேரணியில் கலந்து கொண்ட அமெரி்க்க பாடகர் டிராவிஸ் ஸ்காட், ஹோட்டல் பாதுகாவலருடன் வாக்குவாத்த்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.

ஒலிம்பிக் ஆண்கள் கூடைப்பந்து அரையிறுதியில், சேர்பியாவுக்கு எதிரான அமெரிக்க பேரணியில் கலந்து கொள்ள ராப்பரும் அமெரிக்க பாடகருமான டிராவிஸ் ஸ்காட் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றிருந்தார்.

இதனை தொடர்ந்து, பாரிஸின் ஜார்ஜல் வி சொகுசு ஹோட்டலில் டிராவிஸ் தங்குவதற்காகச் சென்றுள்ளார். இந்தநிலையில் டிராவிஸ்சுக்கு அவரது மெய்க்காப்பாளருக்குத் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அவர்கள் இருவருக்கும் இடையிலான வாக்குவாத்த்தை தடுக்க ஹோட்டலின் பாதுகாவலர் முன்வந்துள்ளார். ஆனால் தடுக்க சென்ற பாதுகாவருக்கும் டிராவிஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஹோட்டலில் ரகளையில் ஈடுபட்டதாக கூறி டிராவிஸ் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹோட்டலுக்கு விரைந்த காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படும் டிராவிஸை கைது செய்தனர்,

இருப்பினும் டிராவிஸ் ரகளை செய்த்தன் காரணம் குறித்த தகவல்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்